Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 நவம்பர் 19 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் தொழிற்துறை (SLIBFI) விருதுகள் 2020 நிகழ்வில் ”ஆண்டின் வளர்ந்து வரும் நிறுவனம்” – “Emerging Entity of the Year” எனும் விருதை செலான் வங்கி சுவீகரித்துள்ளது. இலங்கையில் இஸ்லாமிய நிதிச் சேவைகளுக்காக வழங்கப்படும் அதியுயர் விருதுகள் வழங்கும் நிகழ்வாக SLIBFI விருதுகள் அமைந்துள்ளதுடன், தொழிற்துறைக்கு போட்டிகரமான முன்மாதிரியாக அமைந்துள்ளது.
இஸ்லாமிய நிதிச் சேவைகளை நாடும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் வகையில், 2018 ஆம் ஆண்டில் செலான் வங்கியின் இஸ்லாமிய வங்கியியல் பிரிவு தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இந்தப் பிரிவு வருமான மட்டம் மற்றும் சொத்துக்கள் பிரிவில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 2020 ஆம் ஆண்டில், இஸ்லாமிய வங்கியியல் பிரிவு வருமானத்தில் 100% க்கு அதிகமான வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரிவும் அதே வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.
செலான் வங்கியின் இஸ்லாமி வங்கிப் பிரிவின் தலைமை அதிகாரி எம். இஸட். சமீர் மொஹமட் இந்த விருதை சுவீகரித்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “பாரம்பரிய வங்கியியல் முறையுடன் இஸ்லாமிய வங்கியியல் முறைமை உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படுவதுடன், இலங்கையில் வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்தச் சேவை ஒரு பிரிவினருக்கு அல்லது ஒரு இனத்துக்கு மாத்திரம் வழங்கப்படுவதில்லை. மாறாக, மாற்று வழிமுறையை எதிர்பார்க்கும் எவருக்கும் பெற்றுக் கொள்ள முடியும். பல தசாப்த காலமாக வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் வங்கியின் அங்கமாக திகழ்ந்து, SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் நிறுவனம்” எனும் விருதைப் பெற்றுக் கொண்டமையானது, வங்கியியல் துறையில் இஸ்லாமிய வங்கி பிரிவை ஒப்பற்ற வகையில் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளுக்கு உண்மையான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.“ என்றார்.
கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், இஸ்லாமிய வங்கிப் பிரிவு உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. செலான் வங்கியின் இஸ்லாமிய வங்கியியல் பிரிவினால் சகல விதமான இஸ்லாமிய வங்கித் தீர்வுகள் மற்றும் சேவைகள் போன்றன வழங்கப்படுவதுடன், அதனூடாக பரந்தளவு வாடிக்கையாளர் பிரிவின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.
சமீர் மொஹமட் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தொழிற்துறையைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் மிகவும் ஊக்கமளிப்பதாகவும், உற்சாகமூட்டுவதாகவும் அமைந்திருப்பதுடன், வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுக்க ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதாகவும் அமைந்திருக்கிறது.” என குறிப்பிட்டார்.
செலான் வங்கியின் இஸ்லாமிய வங்கிப் பிரிவு, இலங்கையில் காணப்படும் இதர போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மிக அண்மைக் காலத்தில் களத்தில் இறங்கிய ஒரு அமைப்பாகும். மேலும், இந்தப் பிரிவின் வாடிக்கையாளர் வட்டம் நன்கு பன்முகப்படுத்தப்பட்ட கூட்டாண்மை மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களை உள்ளடக்கியுள்ளது. கூட்டாண்மை சார்ந்த நிறுவனங்களின் நிதி வசதிகள் புதுப்பிக்கத்தக்க வலு (Renewable Energy), ரியல் எஸ்டேட் (Real Estate), நிர்மாணம் (Construction) மற்றும் விவசாயம் (Agriculture) போன்ற வியாபார நடவடிக்கைகளைக் கொண்டுள்ளதுடன், தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் நிதி வசதிகள் பிரதானமாக வீடமைப்பு, வாகன குத்தகை போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
36 minute ago
58 minute ago
1 hours ago