Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை
S.Sekar / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, தனது மொபைல் வங்கிச் சேவை app ஐ மெருகேற்றம் செய்துள்ளது. அதனூடாக சிறந்த பாதுகாப்பு மற்றும் சௌகரியம் போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை மேலும் உறுதி செய்துள்ளது. தற்போதைய சூழலில் மக்களின் நடமாட்டம் பெருமளவில் குறைவடைந்துள்ள நிலையில், இந்த மெருகேற்றம் செய்யப்பட்ட app என்பது, எந்தப் பகுதியிலிருந்தும் வழமையான வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பதற்கு சிறந்த தீர்வாக அமைந்திருக்கும்.
மேம்படுத்திய பாவனையாளர் அனுபவத்தை வழங்கும் வகையில் சௌகரியமான பாவனையாளர் உட்கட்டமைப்பை கொண்டதாக இந்த app இன் பிந்திய வெளியீடு அமைந்துள்ளது. விரல் ரேகை மற்றும் முக அடையாளம் போன்றவற்றை உறுதி செய்து login செய்யும் வசதியைக் கொண்டுள்ளதுடன், கணக்கு விவரங்களை பார்வையிடுவதற்கு மிகவும் பாதுகாப்பான அனுமதியை வழங்குகின்றது. App இனுள் பாதுகாப்பான முறையில் கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளும் வசதியும் பாவனையாளருக்கு வழங்கப்படுகின்றது. கணக்குகளை ஆரம்பிப்பதற்கு கிளைகளுக்கு விஜயம் செய்ய வேண்டிய தேவையை இல்லாமல் செய்துள்ளதுடன், இந்த பிந்திய வெளியீட்டினூடாக, பாவனையாளர்களுக்கு நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளை ஒன்லைனில் ஆரம்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அருகாமையிலுள்ள செலான் வங்கிக் கிளைகள், ATMகள், CDM மற்றும் CDK பகுதிகளை இனங்காணக்கூடிய வகையில் உள்வைக்கப்பட்டுள்ள தேசப்பட வசதியும் காணப்படுகின்றது.
இந்த மெருகேற்றம் செய்யப்பட்ட வெளியீடு தொடர்பில் செலான் வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் பிரிவின் தலைமை அதிகாரி சமிந்த செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “மேலதிக உள்ளம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் பாதுகாப்பு போன்றவற்றினூடாக, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் செலான் மொபைல் வங்கிச் சேவை App அமைந்துள்ளது. எமது நாளாந்த வாழ்க்கையில் நாம் பல சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலையில், இந்த மொபைல் வங்கிச் சேவை App இன் மெருகேற்றத்தினூடாக, வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் முன்னெடுக்கப்படும் அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தேவைகள் தொடர்பில் அவர்களின் கருத்துக்களின் பிரகாரம் செலான் வங்கியைச் சேர்ந்த நாம் தெளிவாக கவனம் செலுத்தி, செலான் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தொடர்ச்சியாக புதிய சௌகரிய மட்டத்துக்கு மேம்படுத்துகின்றோம். இலகுவாக அணுகக்கூடிய வகையில், இந்த டிஜிட்டல் சேவைகளை பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் வழங்குவதற்கு செலான் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், ஒரு பிரிவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை.” என்றார்.
மொபைல் app இல் தமது முன்னைய கொடுக்கல் வாங்கல்களை பார்வையிடுவது, தொலைந்த அல்லது களவாடப்பட்ட அட்டைகள் பற்றி அறிவிப்பது, எதிர்காலத்தில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக கணக்குகளையும், கட்டணப்பட்டியல்களையும் பதிந்து வைத்திருத்தல், கணக்குகளுக்கு புனைப்பெயர்களைப் பதிதல் மற்றும் பல அம்சங்கள் அடங்கலாக பல இதர சேவைகளையும் செலான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும், ஏற்கனவே காணப்படும் நிலையான வைப்புகள், கடன்கள் மற்றும் வட்டி வீதங்களை கணிப்பிடுதல் போன்ற வசதிகளையும் வழங்குகின்றது.
செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது என்பது, செலான் வங்கியைச் சேர்ந்த எம் முன்னுரிமையாக அமைந்துள்ளது. எமது தீர்வுகள் மற்றும் சேவைகளை இலகுவாக, சௌகரியமாக மற்றும் பாதுகாப்பாக பெற்றுக் கொடுக்கக்கூடிய சகல வழிமுறைகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றோம். செலான் மொபைல் App ஐ மெருகேற்றம் செய்வது என்பது, எமது வாடிக்கையாளர்களுக்கு 24/7 நேரமும் வங்கிச் சேவைகளை தடங்கல்களின்றி பெற்றுக் கொடுப்பதற்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது.” என்றார்.
Google Play Store அல்லது Apple App Store ஊடாக ஏற்கனவே காணப்படும் செலான் மொபைல் வங்கி App ஐ புதிய வெளியீட்டுக்கு அப்டேட் செய்து, சிறந்த மற்றும் பாதுகாப்பான மொபைல் வங்கிச் சேவை அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
1 hours ago
1 hours ago