Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் குவாங்சூ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சீன சர்வதேச சுற்றுலா தொழிற்றுறை கண்காட்சியில் இலங்கையும் பங்கேற்றிருந்தது. சீனாவுக்கான இலங்கை தூதுவராலயத்தால் இந்த ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வு செப்டெம்பர் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இடம்பெற்றது.
சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில், இந்தக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் பங்கேற்றிருந்த இலங்கை காட்சிகூடம், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாப் பகுதிகளின் புகைப்படங்களைக் கொண்டிருந்தது. அத்துடன், இலங்கையின் புகழ்பெற்ற கைவினைப் பொருள்களையும், பாரம்பரிய பகுதிகளின் காட்சிகளையும் உள்ளடக்கியிருந்தது. பெருமளவான சீனர்கள் இந்த காட்சிக்கூடத்துக்கு விஜயம் செய்து, இலங்கையின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பான சுற்றுலா வழிகாட்டல் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதாக சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
சுற்றுலா கையேடுகள், பிரயாண தகவல்கள் போன்றனவும் இந்த காட்சிகூடத்தினூடாக பகிரப்பட்டிருந்தன.
இலங்கையின் பாரம்பரிய ஆடைகளில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் இந்தக் காட்சிக்கூடத்தில் பிரசன்னமாகியிருந்ததுடன், பார்வையாளர்கள் பலரின் கவனத்தை ஈர்க்கும் விடயமாக இது அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் ஒலிபரப்பாகிய வானொலி சேவையின்போது, இலங்கையின் அழகிய பகுதிகள், வீசா பெற்றுக் கொள்ளும் முறை போன்ற தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
கியுபா, ஈரான், ஈக்குடோர், உருகுவே, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஆர்ஜன்டீனா, லாவோஸ், வெனிசுலா, இந்தோனேசிய நாடுகளின் தூதரகங்களின் காட்சிக்கூடங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago