Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 மே 24 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சியெட் களனி ஹோல்டிங்ஸ், 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மேலும் 10 பாடசாலைகளுக்கு வீதிப் பாதுகாப்பு உபரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதனூடாக, பாடசாலை மாணவர்களுக்கான நிறுவனத்தின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தை அதன் 15 ஆவது வருடத்துக்கும் விஸ்தரித்துள்ளது.
பயன் பெறும் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் ஏழு வீதி பாதுகாப்பு சமிக்ஞை அட்டைகள், 10 போக்குவரத்து கூம்புகள், 10 போக்குவரத்து மேலங்கிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த 300 கையேடுகள், என 10 பாடசாலைகளுக்கு மொத்தமாக 3,270 பாதுகாப்பு உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
'மக யன மக' என அழைக்கப்படும் இந்தத் திட்டம், 'சியெட் கெயார்' (CEAT Care) சமூக திட்டத்தின் கீழ் சியெட் களனி உறுதியளித்த சமூக முயற்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கிணங்க பிரதான வீதிகளுக்கு அருகாமையில் மற்றும் அதிக நெரிசல் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு, குறிப்பாக பாடசாலை பிள்ளைகளுக்கு, பயணத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்குவது இத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளது. இந்த முதன்மையான சமூக முயற்சியானது சியெட்டின் வீதிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அதன் அனைத்து தயாரிப்புகளிலும் இது ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. மேலும், இது பாதுகாப்பை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது தினமும் போக்குவரத்தை பாதுகாப்பானதாகவும் மிடுக்கானதாகவும் மாற்றும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
அண்மைய நன்கொடைகளின் மூலம் பயனடைந்த 10 பாடசாலைகள் ஹேமமாலி மகளிர் கல்லூரி – கண்டி, பதுளை மத்திய மகாவித்தியாலயம், கித்தலாகம கிழக்கு கனிஷ்ட வித்தியாலயம் – திஹாகொட, முந்தலம சிங்கள மகாவித்தியாலயம் – புத்தளம், கிரில்லவல மத்திய கல்லூரி, சங்கிலிகநாதராவ மகாவித்தியாலயம் – மதவாச்சி, மலியதேவ கல்லூரி – குருநாகல், வலஸ்முல்ல தேசிய பாடசாலை, அசோகா கல்லூரி – ஹொரணை மற்றும் ஸ்ரீ பராக்கிரம மகாவித்தியாலயம் – பனாகொட ஆகியனவாகும்.
சியெட்டின் 'மக யன மக' நிகழ்ச்சித் திட்டம் 2010 இல் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை நாடளாவிய ரீதியிலுள்ள 290 பாடசாலைகள் பயனடைந்துள்ளன. அலட்சியம் மற்றும் வீதி விதிகளை முறையாக கடைப்பிடிக்காததால் வீதி விபத்துகளால் ஏற்படும் காயங்கள் மற்றும் மரணங்கள் தொடர்பான ஆபத்தான புள்ளிவிவரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இது தொடங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago