Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 19 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை ரூ. 84 இனாலும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை ரூ. 90 இனாலும், ஒடோ டீசல் லீற்றரின் விலை ரூ. 113 இனாலும், சுப்பர் டீசல் லீற்றரின் விலை ரூ. 75 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை ரூ. 338 ஆக அமைந்திருப்பதுடன், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை ரூ. 373 ஆகும். ஒடோ டீசல் லீற்றரின் விலை ரூ. 289 ஆக காணப்படுவதுடன், சுப்பர் டீசல் லீற்றரின் விலை ரூ. 329 ஆகும்.
நேற்று நள்ளிரவு முதல் LIOC எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் சிபெட்கோ எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எரிபொருள் நிரப்புவதற்கு இலகுரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த எல்லைக் கட்டுப்பாடுகளும் உடன் அமலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago