Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 06 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சமூகத்தார் மத்தியில் சூழல் சுகாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் செயற்திறனான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் நோக்குடன் Lumala என அறியப்படும் City Cycle Industries Manufacturing (Pvt.) Ltd., சர்வதேச தொழிற்துறை எக்ஸ்போ 2024 நிகழ்வில் பங்கேற்றிருந்தது. இந்நிகழ்வை தொழிற்துறை அமைச்சு (MOI) மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி சபை (IDB) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
நாட்டில் முன்னெடுக்கப்படும் அதிகளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த சர்வதேச தொழிற்துறை எக்ஸ்போ 2024 நிகழ்வு, அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பரந்தளவு தொழிற்துறைகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான கண்காட்சியாளர்களை ஒன்றிணைத்திருந்ததுடன், அவர்களின் உற்பத்திகள் மற்றும் புத்தாக்கங்களை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளின் விருந்தினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் Lumala பங்கேற்றிருந்ததுடன், சூழலுக்கு நட்பான, செலவுச் சிக்கனமான, ஸ்மார்ட் நடமாடல் தீர்வுகளை அறிமுகம் செய்திருந்தது. அவர்களின் Voltage edition e-bikes இனால் ஒரு தடவை சார்ஜ் செய்து, 100 கிலோமீற்றர்களுக்கு அதிகமான தூரம் பெடல் மிதிப்பு உதவியுடன் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும். அத்துடன் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு முழு வலுவி் இயங்கும் போது, 60 கிலோமீற்றர்களுக்கு அதிகமான தூரம் பயணிக்கக்கூடியதாக இருக்கும்.
அவர்களின் e-bike வண்டியான Eco Hauler ஆனது, இலங்கையில் காணப்படும் அவசர கழிவு முகாமைத்துவ பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. USAID Clean Cities, Blue Ocean (CCBO) நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து, பிளாஸ்ரிக் கழிவை தணிப்பதற்கு பெருமளவு பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன. அதனூடாக, நகர, ஆற்றோரங்கள் மற்றும் கரையோர பகுதிகளில் காணப்படும் கழிவுகளை வினைத்திறனான வகையில் சேகரிக்கக்கூடியதாக இருக்கும்.
இதுபோன்ற புத்தாக்கம் Lumala ஐப் பொறுத்தமட்டில் புதிய விடயமல்ல. திறமையான R&D நிபுணர்களால் சூழல் நிலைபேறாண்மையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதுடன், தூய மற்றும் பசுமையான புவிக்கு வழியமைக்கப்படுகின்றது.
ஜுன் 18 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டிருந்த e-சைக்கிள் பவனில், Lumala தனது மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க சைக்கிள்களை வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையில் பெருமைக்குரிய வகையில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இந்தப் பவனி உள்ளடக்கியிருந்தது. இதனை IDB, MOI, இலங்கை வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (SLACMA) மற்றும் வாகன பொருத்துனர்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
மூன்றாவது முறையாக இந்த பவனி முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இதன் போது 200 க்கும் அதிகமான பரந்தளவு வாகனங்கள் காலி முகத்திடல், லோட்டஸ் சுற்றுவட்டம், கோட்டை, டெக்னிகல் சந்தி, பஞ்சிகாவத்தை, மருதானை, பொரளை, பொரளை மயான சந்தி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் வரை பயணித்திருந்தன. பவனியின் போது Lumala உடன் புகழ்பெற்ற பாடகரும், பொப் பாடகர்களான பாதியா, சந்துஷின் ஜோடியின் ஒருவரின் சகோதரருமான துஷ்யந்த் வீரமன் சைக்கிளோட்டியாக கலந்து கொண்டார்.
சர்வதேச நிலைபேறாண்மைக்கு ஆதரவளிக்கும் பரந்தளவு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற சூழலுக்கு நட்பான தீர்வுகளை வடிவமைப்பதில் Lumala தன்னை அர்ப்பணித்துள்ளது. ஸ்மார்ட் நடமாடல் தீர்வுகளில் Lumala இன் தலைமைத்துவத்தை இந்த அர்ப்பணிப்பு உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago