Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 02 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சன்ஷைன் ஹோல்டிங்ஸ், அதன் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (Environmental, Health and Safety - EHS) ஆகிய கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. சன்ஷைன் ஹோல்டிங்ஸின் செயல்பாடுகளில் ஆழமாகப் பதிந்துள்ள பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும் வகையில், அண்மையில் Sunshine Safety Forumஇல் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது. தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (National Institute of Occupational Safety and Health - NIOSH) பணிப்பாளர் நாயகம் டொக்டர் சம்பிகா அமரசிங்க இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இந்த நிகழ்விற்கு சன்ஷைன் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், சன்ஷைன் ஹோல்டிங்ஸின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊழியர்களின் சுகவாழ்வை உறுதிப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு கலாச்சாரத்தை மேம்படுத்தவும் இன்று நிறுவனங்களுக்கு EHS கொள்கைகள் முக்கியமானவை. மேலும் இது பணியிட விபத்துக்களில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், விபத்து தொடர்பான செலவுகளைக் குறைக்கவும் மற்றும் நிலையான செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் உதவுகிறது. இந்த சூழ்நிலையில், சன்ஷைன் ஹோல்டிங்ஸ், பாதுகாப்பான மற்றும் அதிக பொறுப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்காக அதன் EHS கொள்கைகளை புதுப்பிப்பதன் மூலம் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட EHS கொள்கைகள், அங்கு பணிபுரியும் 1,700க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பொருந்தும் நவீன பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சன்ஷைன் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஷியாம் சதாசிவம் இந்தக் கொள்கைகளின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவிக்கையில், "எங்கள் வெற்றிக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் புதுப்பிக்கப்பட்ட EHS கொள்கையானது ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த சான்றாகும். ஒன்றாக செயற்படுவதன் மூலம் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்தும் பணியிட கலாச்சாரத்தை உருவாக்க முடியும்.” என தெரிவித்தார்.
புதிய EHS இலச்சினை மற்றும் பாதுகாப்புக் கொள்கை சன்ஷைன் பாதுகாப்பு மன்றத்தில் வெளியிடப்பட்டதுடன் பணியிடத்தில் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு கலாச்சாரத்தை உருவாக்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இது தெளிவாக நிரூபித்தது. இது தவிர, சன்ஷைன் குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற அமைப்புகளின் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் முதலுதவி குழுக்களும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மேம்படுத்தப்பட்ட EHS நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதற்கு இந்தக் குழுக்கள் பொறுப்பாகும், மேலும் பணியிடத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தாங்கள் வகிக்கும் முக்கியப் பங்கைக் காட்ட இந்த அணிகள் ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுகின்றன.
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் Sunshine Holdings இன் அர்ப்பணிப்பைப் பாராட்டிய கலாநிதி சம்பிக்க அமரசிங்க குறிப்பிடுகையில், “சன்ஷைன் ஹோல்டிங்ஸின் EHS கொள்கையை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு சிறப்பானது. புதிய பாதுகாப்புக் கொள்கைகளுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த EHS கொள்கை, ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் வணிக நோக்கங்களை எவ்வாறு வெற்றிகரமாக அடைய முடியும் என்பதற்கு ஒரு முக்கிய உதாரணமாகக் குறிப்பிடலாம். மேலும் சன்ஷைன் ஹோல்டிங்ஸின் வணிக மாதிரி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, வலுவான மற்றும் நிலையான வணிக நடைமுறைகளை உருவாக்குவதற்கான சிறந்த மாதிரியை வழங்குகிறது. இந்த முறைகள் நிறுவனம் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படவும் அதன் பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பெறவும் உதவுகிறது.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago