Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஜூன் 21 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் டிஜிட்டல் கல்வியறிவை அதிகரிப்பதற்கான கொமர்ஷல் வங்கியின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரசார செயற்பாடானது, 300வது தகவல் தொழினுட்ப (IT) ஆய்வுகூட நன்கொடையை நிறைவு செய்ததன் மூலம் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் தலைவர் ஷர்ஹான் முஹ்சீன், பிரதித் தலைவர் ராஜா சேனாநாயக்க, முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி; சனத் மனதுங்க, பிரதம நிதியியல் அதிகாரி நந்திக புத்திபால மற்றும் பிரதி பொது முகாமையாளர் - சில்லறை வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல், ஹஸ்ரத் முனசிங்க ஆகியோர், வங்கியின் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு நிதியத்தின் அறக்காப்பாளர்களாக திகழும் நிலையில் வங்கியின் சார்பில் இவர்களின் பிரதிநிதித்துவதுடன் இந்த முக்கியமான நிகழ்வானது பயனாளிகள் பாடசாலையான மினுவாங்கொடை, நாலந்த ஆண்கள் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
கொமர்ஷல் வங்கியினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒவ்வொரு தகவல் தொழில்நுட்ப (IT) ஆய்வுகூடமும் புதிய கணினிகள் மற்றும் பாகங்கள் மற்றும் தளபாடங்களுடன் அமைந்துள்ளதுடன் மேலும் பல வருடங்களாக பல தொகுதி மாணவர்களால் ஆய்வு கூடங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக வங்கியால் அவ்வப்போது பராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. பாடசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கிய தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் மூலம் ஏற்கனவே 300,000 க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளதாக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வுத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பக் கல்வியே மிகப்பெரிய செயலாக்கப் பணியாகும். நன்கொடையாக வழங்கப்பட்ட 300 தகவல் தொழினுட்ப (IT) ஆய்வு கூடங்களை தவிர, 165 பாடசாலைகளை டிஜிட்டல் கற்றல் வசதிகளுடன் கூடிய தேசிய ஸ்மார்ட் பாடசாலைகளாக்கும் முயற்சியில் முக்கிய பங்காளியாக வங்கி தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மாணவர்கள் எளிதாகக் கற்க வசதியாக நடைமுறை வீடியோக்கள் மற்றும் விளக்கக்காட்சிகளுடன் கூடிய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பாடசாலை பாடத்திட்ட உள்ளடக்கத்திற்கும் வங்கி நிதியுதவியளித்துள்ளது. மாணவர்களின் சிந்தனை ஆற்றலை மேம்படுத்துவதற்காக 170 ஸ்மார்ட் வகுப்பறைகள் (STEM) மற்றும் 120 கணித ஆய்வு கூடங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. 3இ000 மாணவர்கள் CISCO நெட்வேர்க்கிங் அகடமி மூலம் தகுதி பெற வழியமைத்துள்ளதுடன் மற்றும் மாணவர்களுக்கு கோடிங் திறனை வழங்க கோடிங் கழகங்களை நிறுவுவதன் மூலம் அரசாங்க பாடசாலைகளில் மென்பொருள் கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
6 hours ago
21 Apr 2025
21 Apr 2025