2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கொமர்ஷல் வங்கி மற்றும் அன்சென் பவர்டக் ட்ரக்டர்ஸ் இணைவு

S.Sekar   / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்சென் அக்ரிகல்ச்சர் வரையறுக்கப்பட்ட (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து, தெரிவுசெய்யப்பட்ட வகையான பவர்டக் ட்ரக்டரை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளருக்கு சிறப்பு குத்தகை பெறுமதிகள், நெகிழ்வு தன்மை கொண்ட கொடுப்பனவு திட்டங்கள் மற்றும் இதர கவர்ச்சியான அனுகூலங்களை வழங்க முன்வந்துள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டமானது விவசாயத் தொழில்முனைவோருக்கு Powertrac Euro 50 மற்றும் Powertrac Euro 45 Cross ட்ரக்டர்களை வாங்குவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் 2022இன் இறுதிப்பகுதி வரை நடைமுறையில் இருக்கும் என வங்கி தெரிவித்துள்ளது.

நெகிழ்வுத் தன்மை கொண்ட குத்தகைப் பொதிகள் மற்றும் பருவகால வருமான வடிவங்களுக்கு ஏற்ற விசேட கொடுப்பனவுத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு மேலதிகமாக, இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ட்ரக்டர்களின் மொத்தத் தொகையில் 15,000  ரூபாயை விசேட கழிவுக்கு உரித்துடையவர்கள் ஆகிறார்கள்.

மேலதிகமாக, இவ்விரண்டு தரப்பினருக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) கீழ் அன்சென் அக்ரிகல்ச்சர் RMV வாகனப்பதிவுக்கான செலவுகளைக் கழித்துக்கொள்ள இணங்கியிருக்கிறது, முதல் வருடத்துக்கான இலவச வாகன காப்புறுதியை வழங்கும், இலவச நிறுவுதல் மற்றும் இயக்குதலுக்கான பயிற்சி மற்றும் கொமர்ஷல் வங்கியிலிருந்து குத்தகை வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளருக்கு ஏழு வரையிலான இலவச தொழில் பராமரிப்பு சேவைகளையும் வழங்கவுள்ளது.

மிகச்சிறந்த குத்தகைக் கட்டணங்களையும் நெகிழ்வுத்தன்மை கொண்ட கொடுப்பனவு வசதிகளையும் வழங்குவதைத் தாண்டி, சிக்கல் இல்லாத ஆவணங்களைப் பெறும் செயற்பாட்டையும், துரித குத்தகை ஒப்புதல்கள் மற்றும் நிபுணத்துவ வழிகாட்டல் ஆகியவற்றையும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் வழங்குவதாக கொமர்ஷல் வங்கி கூறியுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டமானது இரண்டு நிறுவனங்களினதும் டிஜிட்டல் தளங்களிலும் நடாத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ள வங்கி, தெரிவு செய்யப்பட கொமர்ஷல் வங்கியின் கிளைகளில் ட்ரக்டர்களை காட்சிப்படுத்தி, அவ்விடங்களில் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதன் மூலம் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் பலாபலன்களை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளருக்கு முடிவெடுத்தலை இலகுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டும் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .