S.Sekar / 2022 ஏப்ரல் 22 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022ம் ஆண்டுக்கான லங்காபே தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் விழாவில் 'மிகச் சிறந்த பொது ATM செயல்படுத்துனர்' என்ற விருதை கொமர்ஷல் வங்கி வென்றுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கொமர்ஷல் வங்கியின் ATM செயற்பாடுகள் மற்றும் சேவைகள் என்பன பெரும் வளர்ச்சி கண்டு சாதனை படைத்துள்ளமைக்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கார்ட் விநியோகம் ATM பணப்பரிமாற்றம், மிகக் குறைந்த அளவிலான அட்டவணையிடப்பட்ட மற்றும் அட்டவணையிடப்படாத சேவைகள் என்பனவும் இந்த விருதுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. வங்கியின் ஒட்டுமொத்த ATM வலையமைப்பும் லங்காபே கார்ட்களை ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும், பொதுவான ATM அழுத்தியோடும் இணைக்கப்பட்டுள்ளன.
அந்த விருதோடு 'சில்லறைக் கொடுப்பனவுகளுக்கான மிகச்சிறந்த வங்கி' 'இந்த வருடத்தின் மிகவும் ஆக்கபூர்வமான வங்கி' 'லங்காபே இணையவழி கொடுப்பனவு மேடையை சிறப்பாகப் பெற்றுள்ள வங்கி' ஆகிய பிரிவுகளில் வெள்ளி விருதையும், 'வங்கிகளுக்கான டிஜிட்டல் கொடுப்பனவுகளில் ஒட்டு மொத்த சிறப்பாற்றல்' விருதையும் வங்கி பெற்றுள்ளது.
கொமர்ஷல் வங்கி, நாட்டில் முதன் முதலாக தனது ஒட்டுமொத்த ATM வலையமைப்புக்கும் EMV (யூரோ, மாஸ்டர் கார்ட் மற்றும் விஸா) பணப்பரிமாற்ற வசதிகளை இன்டர் கிரேடட் செர்கிட் மூலம் பெற்றுக் கொண்ட வங்கியாகும். EMV சிப் அடிப்படையிலான கார்ட்களை (டெபிட் மற்றும் கிரடிட்) முதலில் அறிமுகம் செய்து லங்காபே ATM வலையமைப்புக்கள் ஊடாகவும் EMV கொடுக்கல் வாங்கல்களை அறிமுகம் செய்ததும் கொமர்ஷல் வங்கி தான். இதன் மூலம் கொமர்ஷல் வங்கியின் கார்ட் வைத்திருக்கும் ஒருவர் லங்காபே வலையமைப்போடு தொடர்புடைய ஏனைய வங்கி ATM களை பாவித்தும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
24 minute ago
36 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
41 minute ago
49 minute ago