Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2022 ஜூலை 01 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஃபைனான்ஸ் ஏசியாவின் முதன்மை விருதுகள் 2022 இல் இலங்கை கொமர்ஷல் வங்கியானது மீண்டும் 'இலங்கையின் சிறந்த வங்கி' மற்றும் 'இலங்கையின் சிறந்த நிலையான வங்கி' ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அரச திட்டங்களுக்கு ஏற்ப வங்கியின் உயர் நிலை வாடிக்கையாளர் சேவை, நெகிழ்ச்சியான திறன் உள்ளிட்ட நேர்த்திமிக்க தொடர்ச்சியான வங்கி செயற்பாடுகளுக்காக இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 25 வருடங்களாக ஆசியாவின் நிதி மற்றும் மூலதனச் சந்தைகள் குறித்து நேர்மையாகவும் புறநிலையாகவும் கருத்துரை வழங்கிய இந்தப் பிரசுரத்தின் மூலம் கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறந்த வங்கியாக 11ஆவது வருடமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஃபைனான்ஸ் ஏசியா கன்ட்ரி விருதுகளில் வங்கியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க கூறுகையில் 'ஒன்றாக, இந்த விருதுகள் சிறந்த செயல்திறன் குறிகாட்டிகள் மூலம் வங்கியின் திறமையை அங்கீகரிப்பதைக் குறிக்கின்றன. வங்கிகள் பெரும்பாலும் நிதிப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படும் அதேவேளையில், நிலையான பங்குதாரர் மதிப்பை உருவாக்குவதற்கு முக்கியமான பல அளவீடுகள் உள்ளன'.
கொமர்ஷல் வங்கியானது 2021 ஆம் ஆண்டில் சிறந்த வங்கியாகத் தெரிவுசெய்யப்பட்டது. அதேபோன்று இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்கிவரும் வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி விளங்குகிறது.
இதற்கிடையில், கொமர்ஷல் வங்கியானது, பொறுப்பு வாய்ந்த நிதியளித்தல், நிதிய உள்ளடக்கம் மற்றும் நிலையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய நிலையான வங்கியியலை உள்ளடக்கிய நிலைத்தன்மைக்கான அதன் மும்முனை அணுகுமுறைக்காக 'இலங்கையின் சிறந்த நிலையான வங்கி' என பெயரிடப்பட்டது. ஒரு பசுமையான மற்றும் பாதுகாப்பான பணியிடத்தையும் கலாச்சாரத்தையும் உறுதிப்படுத்துவதன் மூலம் ஒரு பொறுப்பான அமைப்பாக இருப்பது மற்றும் நிலையான விநியோகச் சங்கிலியை மேம்படுத்துதல், சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஈடுபாடுகளை உள்ளடக்கிய அதன் சமூக முயற்சிகளுக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
34 minute ago
36 minute ago