Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2022 ஜூலை 18 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிப்படையான அறிக்கையிடலுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மையை பேணும் சிறந்த 10 நிறுவனங்கள் வரிசையில் தெரிவாகியுள்ளது. இந்த வரிசையில் தெரிவாகிய முதல் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் (TISL) 2022 ஆம் ஆண்டு அறிக்கையில் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட TISL அறிக்கையில், யூனியன் அஷ்யூரன்ஸ் 8 ஆம் ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த அறிக்கையில் 16ஆம் ஸ்தானத்தில் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தினால் பின்பற்றப்படும் கடுமையான வெளிப்படையான அறிக்கையிடல் செயன்முறைகளுக்கு கிடைத்த சான்றாக இது அமைந்துள்ளது.
சந்தை மூலதனவாக்கத்தின் பிரகாரம், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட 75 நிறுவனங்களை மதிப்பாய்வு செய்து இந்த தரப்படுத்தல் வழங்கப்பட்டிருந்தது. கூட்டாண்மை தரவுகள் வெளிப்படுத்தல் செயன்முறை தொடர்பில் சுயாதீனமாக முன்னெடுக்கப்படும் மதிப்பாய்வாக இது அமைந்திருப்பதுடன், மோசடி தவிர்ப்பு மற்றும் மோசடிகளுக்கு எதிரான செயற்பாடுகள் – மோசடி தவிர்ப்பு நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கையிடல், நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் உள்நாட்டு செயற்பாடுகள் தொடர்பான பிரதான நிதித் தகவல்கள் போன்றவற்றின் அடிப்படையில் நிறுவனங்களை தரப்படுத்தியிருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா கருத்தத் தெரிவிக்கையில், “கூட்டாண்மை கடப்பாடு என்பதில் உறுதியான கலாசாரத்தை நிறுவனம் கொண்டுள்ளது. சகல பங்காளர்கள் மத்தியில் இதனூடாக நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளமை மாத்திரமன்றி, எமது ஊழியர்களையும் வியாபாரத்தையும் பாதுகாத்துள்ளதுடன், எமது வர்த்தக நாமத்தை மேம்படுத்திக் கொள்ள உதவியுள்ளது.” என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “நிறுவனத்தினுள் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் கொள்கைகளினூடாக அனைவரும் வழிநடத்தப்படுகின்றனர். கூட்டாண்மை ஆளுகை கட்டமைப்பினூடாக மோசடி மற்றும் இதர எல்லை மீறல்கள் போன்றன இடர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஒழுக்கமான கலாசாரம், சிறந்த உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் இடர் முகாமைத்துவ பொறிமுறைகள் போன்றவற்றை நாம் கொண்டுள்ளோம். இவற்றினூடாக நிலைபேறான பெறுமதி ஏற்படுத்தப்படுகின்றது.” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் மீளாய்வு மற்றும் ஒழுக்கம் உதவி உப தலைவர் ரெஹான் இஸ்மைல் கருத்துத் தெரிவிக்கையில், “TISL இடமிருந்து இந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். வெளிப்படையான அறிக்கையிடலில் தொடர்ச்சியாக நாம் மேற்கொண்டு வரும் முன்னேற்றங்களைப் பொறுத்தமட்டில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது என நாம் கருதுகின்றோம்.” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “TISL போன்ற புகழ்பெற்ற சுயாதீன அமைப்பினால் மேற்கொள்ளப்படும் மதிப்பாய்வுகளினூடாகா, உறுதியான கொள்கைகள் வெளிப்படுத்தல்கள், கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகள் போன்றன யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தினுள் காணப்படுகின்றமை உறுதியாகியுள்ளது. மோசடி மற்றும் இலஞ்சம் தொடர்பில் கடுமையான விதிமுறைகளை நிறுவனம் கொண்டுள்ளது. நன்நடத்தை தொடர்பான ஒழுக்கக்கோவையினூடாக, பதவிநிலையில் வேறுபாடின்றி எமது சகல ஊழியர்கள் மத்தியிலும் நல்லொழுக்கமான செயற்பாடுகள் உறுதி செய்யப்படுகின்றது.” என்றார்.
புகழ்பெற்ற பன்முகப்படுத்தப்பட்ட குழுமமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. உறுதியான ஒழுக்கப் பெறுமதிகளுக்காக புகழ்பெற்றுள்ள ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், TISL இன் 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூட்டாண்மை அறிக்கையிடலுக்காக முதல் நிலையில் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago