Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 11, சனிக்கிழமை
J.A. George / 2023 ஜூன் 13 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சன் மெட்ச் நிறுவனத்தின் நம்பிக்கையை வென்ற சூரியா ஊதுபத்திகள், ‘குத்தில’ திரைப்படத்துக்கு அனுசரணை வழங்குகிறது
கண்டி, குண்டசாலையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக இலங்கையர்களின் நன்மதிப்பைப் பெற்று இயங்குகின்றது. சூரியா ஊதுபத்திகள் பெருமைக்குரிய உற்பத்தியாளரான இந்நிறுவனம், ‘குத்தில’ திரைப்படத்தின் மாபெரும் ஆக்கத்திறன் மற்றும் அர்ப்பணிப்பை முழுமையாக அங்கீகரித்துள்ளது.
14 வாசனைகளைக் கொண்ட சூரியா ஊதுபத்திகளினூடாக, அமையும் தூய்மை உணர்வு தூண்டப்படுவதுடன், திரைப்படத்துடன் ஆழமான பிணைப்பையும் கொண்டுள்ளது.
சன் மெட்ச் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியுமான கௌரி ராஜன் கருத்துத் தெரிவிக்கையில், “குத்தில திரைப்படத்துடன் சன் மெட்ச் நிறுவனம் கைகோர்த்துள்ளமை தொடர்பில் மிகவும் பெருமை கொள்கின்றது. எமது கலாசாரத்தின் ஆழமான பெறுமதிகளை வெளிப்படுத்த நாம் எதிர்பார்ப்பதுடன், இலங்கையில் வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை வெளிக்கொணரவும் எதிர்பார்க்கின்றோம்.
விசேடமாக, தற்போதைய சூழலில், குடும்பம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோம். குத்தில திரைப்படத்துக்கு ஆதரவளிப்பதனூடாக நாட்டின் திறமையான கலைஞர்களுக்கு கைகொடுப்பது மாத்திரமன்றி, நாடு முழுவதிலும் எமது பாரம்பரியப் அம்சங்களை அழகான முறையில் வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
சூரியாவின் வர்த்தக நாமத் தூதுவரும், இலங்கையின் பிரபல நடிகையுமான யசோதா விமலதர்ம ‘குத்தில’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
யசோதா விமலதர்ம கருத்துத் தெரிவிக்கையில், “குத்தில திரைப்படத்தில் அங்கம் பெற எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். சூரியா ஊதுபத்திகள் இதன் பிரதான அனுசரணையாளராக இணைந்துள்ளமை தொடர்பில் அதிகம் திருப்தியடைகின்றேன்.” என்றார்.
சங். பேராசிரியர் அகலகட ஸ்ரீசுமன தேரரினால் திருத்தப்பட்ட ‘குத்தில’ காவியத்தை தழுவி இந்தத் திரைப்படம் அமைந்துள்ளதுடன், 12 வருடங்களின் பின்னர் வெள்ளித் திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஹரேன் நாகொடவிதான மற்றும் திலினி சில்வா ஆகியோரினால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர், உரையாடல், திரைக்கதை போன்றன ஸ்ரீ சனத் அபேசேகரவினால் மேற்கொள்ளப்பட்டது. இதர பிரதான நடிகர் நடிகைகளில், விஷாரத எட்வர்ட் ஜெயகொடி, அகில தனுத்தர, இராங்கனி சேரசிங்க மற்றும் சதிஷ்சந்திர எதிரிசிங்க ஆகியோர் அடங்குகின்றனர். EAP திரை அரங்குகள் அடங்கலாக, திரை அரங்குகளில் இந்தத் திரைப்படம் காட்சிப்படுத்துவதுடன் , ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
‘குத்தில’ திரைப்படத்தின் பணிப்பாளர் சனத் அபேசேகர கருத்துத் தெரிவிக்கையில், “பாரம்பரியம் மற்றும் கலாசாரம் போன்ற அம்சங்களுக்கு சன் மெட்ச் கம்பனி முக்கியத்துவம் வழங்குவதுடன், இந்தத் திரைப்படத்தை தயாரிப்பதற்காக அவர்கள் எம்முடன் கைகோர்த்திருந்தமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். குத்தில திரைப்படத்துக்கு அனுசரணை வழங்கியிருந்தமை தொடர்பில் சன் மெட்ச் நிறுவனத்துக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago