2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கி மற்றும் ஹேலிஸ் சோலார் இணைந்து சோலார் வலுக்கட்டமைப்பு அன்பளிப்பு

Freelancer   / 2024 நவம்பர் 18 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியும் ஹேலிஸ் சோலாரும் இணைந்து திஸ்ஸமஹாராமவிலுள்ள ஸ்ரீ கவுந்திஸ்ஸ தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் திஸ்ஸமஹாராம ரஜமஹா விகாரை ஆகியவற்றின் பயன்பாட்டிற்காக ஒளி மின்னழுத்த சோலார் தொகுதி மின்சார விநியோக அமைப்பை அண்மையில் நன்கொடையாக வழங்கின.

40kW சக்தியுடைய மின் விநியோக அமைப்பான சோலார் வலுக்கட்டமைப்பானது ஸ்ரீ கவுந்திஸ்ஸ தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் மற்றும் நாடளாவிய ரீதியில் இருந்து விகாரைக்கு வருகை தரும் பக்தர்களுக்கும் பயனளிப்பதுடன் மேலும் இரு நிறுவனங்களினதும் மின்சார செலவைக் குறைக்கவும் உதவுகிறது.

இரண்டு நிறுவனங்களின் நன்கொடையானது கொமர்ஷல் வங்கி மற்றும் ஹேலிஸ் சோலார் ஆகியவற்றுக்கு இடையேயான மூலோபாய ஒத்துழைப்பில் இருந்து, வங்கியின் 'திரிபல பசுமை மேம்பாட்டுக் கடன்' திட்டத்தின் கீழ் சலுகை விதிமுறைகளை வழங்குவதற்காக, ஹேலிஸ் சோலாரிடமிருந்து பல பிரத்தியேக நன்மைகளுடன் சூரிய மின்சக்தி தொகுதிகளை வர்த்தகங்களுக்கு கொள்வனவு செய்யும் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சோலார் வலுக்கட்டமைப்பு நன்கொடையாக வழங்கப்பட்ட நிகழ்வில், கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க, வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர், ஹேலிஸ் சோலார் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசித் பிரேமதிலக மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் கே.ஏ.லலிதா தீரா ஆகியோர் நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து வைக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X