Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி, 'திரிபல அடுத்த தலைமுறை பாடசாலை தொழில் முயற்சியாளர் ஒழுங்கு முறை திட்டம்' என்ற புதிய முயற்சியை பாடசாலை தொழில்முயற்சியாண்மையை வலுவூட்டல் மற்றும் பாடசாலை தொழில்முயற்சியாளர்கள் பிரிவினரிடையே அறிமுகப்படுத்துகிறது.
திரிபல அடுத்த தலைமுறை பாடசாலை தொழில்முயற்சியாளர் ஒழுங்கு முறை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கம்பஹாவில் அமைந்துள்ள யசோதரா தேவி மகளிர் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் பாடசாலையில் ஏராளமான மாணவர்கள் காகித குயில்லிங், மெழுகுவர்த்தி தயாரித்தல், தலைமுடி கிளிப்புகள், சித்திரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவை தொடர்பான சுய தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர்-தனிப்பட்ட வங்கியியல் திலக்ஷன் ஹெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மெகா ஹீட்டர்ஸ் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உபாலி ஜயசேகர சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி யசோதரா தேவி மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி கயானி வத்சலா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பி.எம்.எஸ்.சி.பத்திராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் தரம் 12 இல் விசேட தொழில்முயற்சியாளர் செயற்திட்டத்தை நிறைவு செய்யவிருப்பதால் இந்நிகழ்வில் ஊக்கத்துடன் பங்குபற்றினர். யசோதரா தேவி பாலிகா வித்தியாலயமானது அதிபர் மற்றும் பாட ஒருங்கிணைப்பாளர் திருமதி. நிரோஷி தமயந்தியின் வழிகாட்டுதலின் கீழ், பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு வர்த்தக ரீதியான சிந்தனைகளை அபிவிருத்தி செய்வதில் பயிற்சிஅளிக்கும் முகமாக இந்தத் திட்டத்தை ஆரம்பித்தது.
கொமர்ஷல் வங்கியின் சார்பாக இங்கு உரையாற்றிய ஹெட்டியாராச்சி, யசோதரா மகளிர் வித்தியாலயமானது கொமர்ஷல் வங்கியின் அடுத்த தலைமுறை நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஆரம்பப் புள்ளியாகும் என்பதை வலியுறுத்தியதுடன் எதிர்காலத்தில் நாடு முழுவதும் உள்ள ஏனைய பாடசாலை தொழில்முயற்சியாளர் வட்டாரங்களுக்கும் இந்த முயற்சியை விரிவுபடுத்துவது தொடர்பாக வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். மாறிவரும் வர்த்தக சூழலுக்கு ஏற்றவாறு மாணவர்களை பயிற்றுவித்து சந்தை தடைகளை கடப்பதற்கு கொமர்ஷல் வங்கி இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஆதரிப்பது ஒரு தேசிய கடமையாகும், அதை நிலைநிறுத்துவதற்கு கொமர்ஷல் வங்கி அர்ப்பணிப்புடன் பணியாற்றவுள்ளது என்றார்.
முதல் நிகழ்வானது, நிதிசார் கல்வியறிவுத் திட்டம் மற்றும் திரு உபாலி ஜெயசேகரவின் ஊக்கமளிக்கும் உரை ஆகியவற்றை உள்ளடக்கிய மாபெரும் வெற்றியைப் பெற்றது. அவர் தொழில் முயற்சியாளர்களின் மனநிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
திருமதி பி.எம்.எஸ்.சி. பத்திராஜா புதிய தொழில்களை ஆரம்பிக்கும் மாணவர்களிடையே வளர்ந்து வரும் போக்கை சிறப்பாக எடுத்துரைத்ததுடன் மற்றும் அவர்களின் தயாரிப்புகளுக்கு பொருத்தமான சந்தைகளைக் கண்டறிவதில் உள்ள சவால்கள் பற்றியும் குறிப்பிட்டார். புதிய தலைமுறையினரின் தொழில் முயற்சியாளர் திறன்களை மேம்படுத்த உதவுவதால் இதுபோன்ற திட்டங்கள் பெரிதும் பயனை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
2 hours ago
3 hours ago