Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, ’SUPERBOX’ உடன் பிரத்தியேகமான பங்காண்மையை ஏற்படுத்தி பாதுகாப்பான கொடுப்பனவு கட்டமைப்பை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாக சிக்கல்களின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டின் அண்மையில் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட ஒன்லைன் சுப்பர்மார்கெட்டாக திகழும் SUPERBOX, பலசரக்கு பொருட்கள் விற்பனையில் விசேடத்துவம் பெற்றுள்ளது. இலங்கையர்களுக்கு சேவையாற்றும் நோக்கில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு பசுமையான, குளிர வைக்கப்பட்ட, உறைய வைக்கப்பட்ட மற்றும் உலர்ந்த பல தயாரிப்புகளை வழங்குகின்றது. சிக்கல்களில்லாத சொப்பிங் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், இலங்கையின் நுகர்வோரின் நடத்தையை புரிந்து கொள்ளும் வகையில் ஆய்வு முன்னெடுக்கப்பட்டு பாவனையாளருக்கு நட்பான வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலகுவான மற்றும் பாதுகாப்பான முறையில் பல்வேறு டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்நுட்ப ரீதியான கட்டமைப்பான MasterCard Payment Gateway Service (MPGS) ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் SUPERBOX உடன் செலான் வங்கி கைகோர்த்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது வீடுகளில் சௌகரியமாக இருந்தவாறு தினசரி அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், அவற்றை தமது இருப்பிடத்துக்கு பாதுகாப்பாக விநியோகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதனூடாக இந்த நெருக்கடியான காலப்பகுதியில் அநாவசியமாக பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக செலான் வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் நாளிகைகளின் தலைமை அதிகாரி சமிந்த செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “செலான் வங்கியுடனான பங்காண்மையின் காரணமாக, SUPERBOX வாடிக்கையாளர்களுக்கு தற்போது மேம்படுத்தப்பட்ட, பாதுகாப்பான மற்றும் வேகமான சொப்பிங் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த இணையத்தளத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு தமக்கென profile ஒன்றை உருவாக்கி, வெளிநாடுகளில் வசித்தாலும், இலங்கையிலுள்ள தமது அன்புக்குரியவர்களுக்கு விநியோகங்களை மேற்கொள்ள முடியும். உள்நாட்டு நிறுவனத்தின் உயர் தர பொறியியலுக்கு சிறந்த உதாரணமாக இது அமைந்துள்ளது. நுகர்வோரை கவனத்தில் கொண்டு அனுபவத்தின் ஒவ்வொரு அங்கமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் சௌகரியத்துக்கு முக்கியத்துவமளிக்கும் நிறுவனம் எனும் வகையில் செலான் வங்கி, Mastercard Payment Gateway சேவையுடனான பங்காண்மை என்பது இலகுவான மற்றும் பாதுகாப்பான கொடுக்கல் வாங்கல் செயன்முறைகளை உறுதி செய்யும் என்பதுடன், SUPERBOX இலிருந்து கொள்வனவு செய்யும் சகல நுகர்வோருக்கும் மோசடிகளை தவிர்த்துக் கொள்வதற்கும் உதவும். இதனூடாக உயர் தரம், வேகம் மற்றும் தங்கியிருக்கக்கூடிய ஒன்லைன் பலசரக்கு சொப்பிங் அனுபவத்தை வழங்குகின்றது.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
22 minute ago