Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 மே 20 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலைபேறான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பகுதி மற்றும் இலங்கை விவசாயத் துறையின் முக்கிய அங்கமாகும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயல்படக்கூடிய கூடிய ஒரு வலுவான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட உணவு முறைமை மற்றும் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய உணவின் போதுமான விநியோகத்துக்கான அணுகலை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை கொவிட்-19 தொற்றுப்பரவல் எடுத்துக்காட்டியுள்ளது. எமது உணவு முறை மேலும் நிலைபேறானதாகவும், நெகிழ்வுத் தன்மையுடையதாகவும் மாற வேண்டும் என்பதற்கு மீண்டும் மீண்டும் அதிகரித்துவரும் வரட்சி, வெள்ளப்பெருக்கு அல்லது புதிய பூச்சிகளின் தாக்கம் என்பன தொடர்ச்சியான நினைவூட்டல்களை வழங்கி வருகின்றன.
ஐரோப்பாவின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த மற்றும் பரந்தளவில், அதன் கூட்டாண்மை நாடுகளுக்கிடையில் ஐரோப்பிய ஒன்றியம் 'பண்ணையிலிருந்து கரண்டி வரை' மூலோபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சியானது நியாயமான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்பான உணவு முறைமையொன்றின் வளர்ச்சிக்கு புதிய நிலைபேறான, உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதைக்கான வரைபடத்தை உருவாக்குகிறது. இந்த மூலோபாயமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலட்சியமான பசுமை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்பதுடன், இது 2050ஆம் ஆண்டாகும்போது நிலைபேறான காலநிலை நடுநிலைமை மற்றும் வினைத்திறனான வளம் கொண்ட எதிர்காலம் என்ற நோக்கத்தை வெளிக்காட்டும்.
2021 செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் உணவு முறைமை மாநாட்டில் பங்கெடுப்பதற்கு இலங்கை தயாராகி வருவதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் பண்ணை முதல் கரண்டி வரை மூலோபாயமானது வேறுபட்ட சூழ்நிலைகள், கொள்கை அமுலாக்கத்தில் சமூக மற்றும் பொருளாதார பரிமாணங்கள் என்பவற்றைக் கவனத்தில் கொண்டு நாடு முழுவதிலும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பான கொள்கையைத் தயாரிப்பதற்கு பயனுள்ள வழிகாட்டல்களை வழங்கும்.
'பண்ணை முதல் கரண்டி வரை' மூலோபாயம் மற்றும் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்த வெபினார் 'பண்ணை முதல் கரண்டி வரை: மேலும் நிலையான உணவு முறையை நோக்கி ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் எவ்வாறு முன்னேறுகின்றன?' என்ற தொனிப்பொருளில் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியிலான இலங்கையில் விவசாய நடவடிக்கைகளை நவீன மயப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago