2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

எயார்டெல், 5G பரிசோதனையை ஆரம்பிக்கிறது

S.Sekar   / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எயார்டெல் லங்கா வர்த்தக வலையமைப்பில் நேரடி 5G பரிசோதனைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகூடிய இணையத்தள வேகத்தை பதிவு செய்துள்ளதாகவும், எயார்டெல் லங்கா 1.9 Gbpsக்கும் அதிகமான வேகத்தில் 5Gக்கான தயார்நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

“இலங்கையானது முன்னோடி தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் வரையறுக்கப்பட்ட ஒரு சந்தையாக இருப்பது மற்றும் எமது 5G திறன்களை அதிகரிப்பதற்கு இன்று நாம் செய்யும் முதலீடுகள் இலங்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான டிஜிட்டல் அடித்தளத்தை அமைக்கும். இன்று அதற்கு சாட்சியாக, நாட்டிலேயே அதிக இணையத்தள வேகத்தை பதிவு செய்ய முடிந்தது, மேலும் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்போது சாதனைகளை முறியடிப்போம்.” என எயார்டெல் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆஷிஷ் சந்திரா தெரிவித்தார்.

"எங்கள் அதிவேக நெட்வொர்க் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகவும் மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த நெட்வொர்க்கை வழங்குவதற்கான எங்கள் உட்பார்வைக்கு ஏற்ப உள்ளது. எயார்டெல்லில் உள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த தருணமாகும்.” என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதுள்ள தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது எயார்டெல் 5G, 10 மடங்கு வேகம், 10 மடங்கு குறைவான தாமதத்திறன் மற்றும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் 100 மடங்கு திறன் கொண்டதாக அமைந்திருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. எயார்டெல் உலகின் புத்தாக்கமான மொபைல் மற்றும் வலையமைப்பு கண்டுபிடிப்பாளர்களில் ஒன்றாக இருப்பதுடன், வலையமைப்பு மேம்படுத்தல்களில் நிறுவனத்தின் கணிசமான முதலீடு காரணமாக 5G பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எயார்டெல் அதன் உலகத் தரம் வாய்ந்த 4G உட்கட்டமைப்பு நாடு முழுவதிலும் 5G தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது. இதனால் அடுத்த தலைமுறைக்கான வலையமைப்பிற்கு தடையற்ற மாற்றத்தை எளிதாக்கி, 3500 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில், தற்போதுள்ள தாராளமயமாக்கப்பட்ட ஒலி அலைக்கற்றையை (Spectrum) NSA (Non Stand Alone) வலையமைப்பு தொழில்நுட்பத்தின் மூலம் எயார்டெல்லுக்கு மேற்கொள்ள முடிந்ததாகவும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .