Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
e-learning தளம், கூட்டங்கள் மற்றும் நேரடி இணையத்தள ஒளிபரப்பு நடவடிக்கைகளின் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில், அதிகரிக்கும் டேட்டா பாவனைக்கு ஈடுகொடுக்கும் வகையில் இலங்கையில் இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள மொபைல் தொலைதொடர்பு நிறுவனமான எயார்டெல் லங்கா, வீட்டிலிருந்து கல்வி கற்றல் (SFH) மற்றும் வீட்டிலிருந்து பணிபுரிதல் (WFH) செயற்பாடுகளை மேற்கொள்ளும் பாவனையாளர்களுக்காக, புதிய பெக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
வாழ்க்கை இயல்பான நிலைக்கு திரும்பிய போதிலும் வீட்டிலிருந்தே பணிபுரியும் (WFH) விருப்பத் தெரிவு தற்போது காணப்படுகின்றது. இதேபோல், பெரும்பாலான பாடசாலைகள், பெற்றோர்கள், மாணவர்கள் தொலைதூர கற்றல் கருவிகள் மற்றும் Online தளங்களை நாடுகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது.
தொடர்ச்சியாக தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இலகுவாக உள்ளதனால் இன்று இதனை பரவலாக்க காரணமாக அமைகின்றது.
இந்தப் புதிய டேட்டா பெக்கேஜ் நம்ப முடியாத விதத்திலான சலுகைகளுடன் கூடிய வீட்டிலிருந்தே கற்றல் (SFH) மற்றும் வீட்டிலிருந்தே பணிபுரியும் (WFH) நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடிய விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், தொலைதூர கற்றல் கருவிகள் மற்றும் Google Classrooms, Zoom, Microsoft Teams, Microsoft Outlook, Microsoft Office 365 போன்ற e-learning வலைத்தளங்கள் மற்றும் அரசின் ஏனைய கட்டாய e-learning தளங்களுக்கு 30 நாள்களுக்கு வரையறையற்ற பயன்பாட்டை வழங்கும்.
இந்தப் பெக்கேஜ் அனைத்து வயதெல்லையினருக்கும் எவ்வித இடையூறும் இன்றி மற்றும் பாதுகாப்பாக இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், மேலதிக டேட்டா தேவையின்றி தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பாவனையாளர்களுக்காக இந்தப் பெக்கேஜ் மிகவும் சிறந்ததாகும்.
வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு அதேபோன்றே தளங்களுக்கு பிரவேசிக்க முடிவதுடன், அந்தத் தளத்திலிருந்து வேறொரு தளத்துக்கு செல்லும் போது டேட்டா பயன்பாடானது, பாவனையாளர்களின் தற்போதுள்ள பொதுவான டேட்டா பெக்கேஜின் கீழ் அறவிடப்படும்.
ரூ. 1499க்கு (வரி நீங்கலாக) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய டேட்டா திட்டத்தை Pre-paid வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். இந்த SFH மற்றும் WFH டேட்டா சலுகையானது, மேலதிக டேட்டாவை பெற்றுக் கொள்வதற்கான மாற்றுத் தீர்வாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சலுகையை பயன்படுத்த முடியும்.
இந்தப் பெக்கேஜ் இரண்டும் ‘My Airtel’ App ஊடாக செயற்படுத்திக் கொள்ளக் கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலதிக தகவல்களை ‘My Airtel’ Appஇல் அல்லது www.airtel.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Bharti Airtel Lankaவை பற்றி
2009 ஜனவரி 12ஆம் திகதி, இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம், தற்போது ஒரு மில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும்.
தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த எயார்டெல், 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு, இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா, தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago