2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

எங்கும் எப்போதும் ப்ரேக்ஃபஸ்ட்: புளூமிங் ப்ரேக்ஃபஸ்ட் கொழும்பில் உதயமாகின்றது

J.A. George   / 2024 மே 03 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைவரும் எதிர்பார்த்திருந்த ப்ளூமிங் ப்ரேக்ஃபஸ்ட் ரெஸ்டோ பார் மற்றும் கஃபே, 2024ஆம் ஆண்டு மே 2ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள ஆர்கேட்-இல் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் திறப்புவிழாவில் கலந்துகொண்டு, எமது புத்தம்புதிய சுவை அனுபவத்தை பெற்று மகிழுமாறு, விசேட விருந்தினர்கள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் நன்கு அறியப்பட்ட உணவுப் பதிவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறோம்.

இலங்கையில் வேறெங்கும் காணாத தனித்துவமான சுவையுடன் கைகோர்ப்பதற்கு, புளூமிங் ப்ரேக்ஃபஸ்ட்-இன் உரிமையாளர்களான நாம் அன்புடன் வரவேற்கின்றோம். காலையுணவு, இரவு உணவு என்றில்லாமல், நீங்கள் விரும்பிய உணவை, நீங்கள் விரும்பும் போது, வாரத்தில் ஏழு நாட்களும் உண்டு மகிழுங்கள். உலகின் பல்வேறு சமையல் வகைகளை, நாளின் எந்நேரத்திலும் பெற்றுக்கொள்ளுங்கள். அது நள்ளிரவாக இருந்தாலும் சரி, அதிகாலை 3 மணியாக இருந்தாலும் சரி, ப்ளூமிங் ப்ரேக்ஃபஸ்ட் எந்நேரமும் நீங்கள் விரும்பும் உங்கள் மனதைக் கவர்ந்த சுவையை வழங்குகிறது.

அனைத்து வாடிக்கையாளர்களும் இலகுவில் கண்டறியும் வகையில், சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள சம்பத் வங்கி தானியங்கி இயந்திரத்திற்கு (ATM) முன் அமைந்துள்ள ப்ளூமிங் ப்ரேக்ஃபஸ்ட், புதிய சூழலில் உணவை இரசித்து உண்ண உங்களை அழைக்கின்றது. அதன் முழுநாள் ப்ரேக்ஃபஸ்ட் மெனுவிற்கு மேலதிகமாக, அமெரிக்க, இத்தாலியன், பிரஞ்சு, அவுஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய உணவுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான உணவு வகைகளை வழங்குகிறது.

உலகளாவிய அனுபவத்துடன் கூடிய சமையற்கலை வல்லுநர்களால் சுவையாக தயாரிக்கப்படும் எமது ஒவ்வொரு உணவுகளும் உங்களுக்கு இணையற்ற சுவையை வழங்கும். “கொழும்பின் சமையல் அத்தியாயத்தில் ஒரு புதிய சுவையை சேர்க்கும் வகையில், ப்ளூமிங் ப்ரேக்ஃபஸ்ட்-இனை அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமைகொள்கின்றோம்” என, ப்ளூமிங் ப்ரேக்ஃபஸ்ட்-இன் நிர்வாகப் பணிப்பாளரான திரு. கோஷல மலிக் தெரிவித்தார். “உணவு பிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் எந்த உணவையும், நாளின் எந்த நேரத்திலும், சுவையாக வழங்குவதே எமது நோக்கமாகும். எமது வித்தியாசமான உணவு வகைகள், தரத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான கொக்டெயில்களுடன், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக  ப்ளூமிங் ப்ரேக்ஃபஸ்ட் இருக்குமென நாம் நம்புகிறோம்” என்றார்.

எமது உன்னதமான சமையல் திறன்களின் இனிமையை அனுபவிக்கவும், இணையற்ற சுவையில் திளைத்திடவும் உங்கள் அனைவரையும் ப்ளூமிங் ப்ரேக்ஃபஸ்ட் அழைக்கிறது. நீங்கள் ஒரு சுவையான காலை உணவை விரும்பினாலும், சர்வதேச உணவு வகைகளை அனுபவிக்க விரும்பினாலும், அல்லது தனிப்பயனாக்கப்பட்ட கொக்டெயிலுடன் ஓய்வெடுக்க விரும்பினாலும், ப்ளூமிங் ப்ரேக்ஃபஸ்ட் அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்கக் காத்திருக்கின்றது. மெனு விபரங்கள் மற்றும் இயங்கும் நேரங்கள் உள்ளிட்ட மேலதிக தவல்களைப் பெற்றுக்கொள்ள  www.bloomingbreakfast.com என்ற இணையத்தளத்தினை பார்வையிடுங்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .