2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

உலகளாவிய ரீதியில் பசிக்கொடுமையை போக்கும் திட்டத்தை Viber ஆரம்பித்துள்ளது

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி தொடர்பாடல் app சேவை வழங்குநரான Rakuten Viber உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, உணவுத் தட்டுப்பாட்டுக்கு எதிராக போராடும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பசிக்கொடுமைக்கு எதிரான திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட புதிய sticker பொதியையும் அறிமுகம் செய்துள்ளது. தனது பாவனையாளர்கள், ஊழியர்கள்,  மற்றும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (FAO) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் (IFRC), இயற்கைக்கான உலக நிதியம் (WWF), UNICEF, U-report மற்றும் U.N. Migration போன்ற மனிதநேய செயற்பாட்டாளர்களை ஈடுபடுத்தி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, ஒவ்வொரு துறையும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக மனித குலத்தின் நிலைபேறுக்கு அவசியமான உணவு விநியோகச் சங்கிலித் தொடர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் ஆகக்குறைந்தது 265 மில்லியன் பேர் வரை பசியினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் (WFP) ஏப்ரல் மாதத்தில் மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்காகும். இதிலிருந்து மீள்வது என்பது, உயிர்களை காப்பது எனப் பொருள்படும். இதில் Viber தனது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது.

ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளிலமைந்த Viber sticker பொதி ஒன்று இந்தத் திட்டத்துக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், Viber-owned community இல் 'Fight World Hunger Together' எனும் விழிப்புணர்வூட்டும் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த sticker களிலிருந்து கிடைக்கும் வருமானம், உணவுப் பசியை போக்குவதில் ஈடுபடும் நலன்புரி அமைப்புகளுக்கு வழங்கப்படும். இந்த சமூகத்தினூடாக, பாவனையாளர்களக்கு உணவருந்தல், சொப்பிங் செய்தல் மற்றும் சமைத்தல் போன்ற பழக்கங்களை மாற்றி அதனூடாக உணவு விரயத்தைக் குறைத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த பொருளடக்கம் ஏiடிநசஇன் மனித நேய பங்காளர்களினால் நிர்வகிக்கப்படும். உடனடியாக நன்கொடை வழங்க முடியாதவர்களுக்கென தெரிவொன்றையும் Viber வழங்குகின்றது. இந்த சமூகத்தில் இணைந்து, தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரை இணைந்து கொள்ளுமாறு இவர்களுக்கு அழைக்க முடியும். 1 மில்லியன் பாவனையாளர்களை இந்தச் சமூகம் எய்தியதும், இந்தத் திட்டத்துக்காக 10,000 அமெரிக்க டொலர்களை ஏiடிநச நன்கொடையாக வழங்கும்.

Rakuten Viber இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜமெல் அகொவுவா கருத்துத் தெரிவிக்கையில், “முன்னரை விட உலகம் வேகமாக மாறிய வண்ணமுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, வறுமை நிலையிலுள்ள குடிமக்கள் மேலும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலகளாவிய ரீதியில் உணவுப் பற்றாக்குறை மற்றும் பசிக் கொடுமை அதிகரிப்பு ஆகிய இந்த தொற்றுப் பரவல் காரணமாக மோசமாக ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் Viber கவனமின்றி இருந்துவிட முடியாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .