Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 நவம்பர் 10 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மாபெரும் காப்புறுதித் தீர்வுகள் வழங்குநர்களான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, ”உங்கள் வாழ்க்கைக்கு, எமது பலம்” எனும் தனது உறுதி மொழியின் பிரகாரம், கொவிட்-19 தொற்றுப் பரவல் காலப்பகுதியில் காப்புறுதிதாரர்களுக்கு இலவச காப்பீட்டை வழங்க முன்வந்துள்ளது.
இலவச கொவிட்-19 காப்பீடு மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே காணப்படும் காப்புறுதிதாரர்கள் மற்றும் புதிய காப்புறுதிதாரர்களுக்கு உறுதியற்ற சூழ்நிலைகளில் மேலதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த காப்பீட்டினூடாக காப்புறுதிதாரர் ஒருவருக்கு தலா 1 மில்லியன் ரூபாய் வரையான இலவச உயிரிழப்பு காப்பீடு வழங்கப்படுகின்றது. இந்த இலவச காப்பீடு 2020 நவம்பர் 2ஆம் திகதி முதல் 01 டிசம்பர் வரையான ஒரு மாத காலப்பகுதிக்கு செல்லுபடியாகும்.
இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்பித்த காலம் முதல், தனிமைப்படுத்தல் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை பண அனுகூலங்களை வழங்க ஆரம்பித்த முதலாவது ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது.
நிறுவனம் தனது பெறுமதி வாய்ந்த சகல காப்புறுதிதாரர்களுக்கு இந்தத் திட்டத்தினூடாக பெறுமதி சேர்ப்பதுடன், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழும் வைத்தியசாலை அனுமதிகளின் போது தினசரி வைத்தியசாலை அனுமதிக் கட்டணத்தை 2020 ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு வழங்க முன்வந்துள்ளது.
உறுதியற்ற சூழ்நிலையில், யூனியன் அஷ்யூரன்ஸ் தனது காப்புறுதிதாரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த காப்பீட்டை வழங்க முன்வந்துள்ளதுடன், இந்த சூழ்நிலை காரணமாக, எழக்கூடிய எந்தவொரு நிதிநெருக்கடிகளுக்கும் காப்புறுதிதாரரையும் குடும்பத்தாரையும் முகங்கொடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது உலகளாவிய ரீதியில் சுகாதார, பொருளாதார மற்றும் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சகல பிரிவுகளையும் சேர்ந்த மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எமது காப்புறுதிதாரர்களுக்கு இந்த இலவசமான காப்பீட்டை உரிய காலத்தில் வழங்குவதுடன், காப்புறுதிதாரர்களின் குடும்பத்தாருக்கு தமது எதிர்காலப் பாதுகாப்பு தொடர்பில் மனநிம்மதியுடன் திகழ முடியும்.
இந்த காப்பீட்டின் விசேடத்துவம் யாதெனில், ஏற்கனவே காணப்படும் காப்புறுதிதாரர்களுக்கு மாத்திரம் இது மட்டுப்படுத்தப்படாமல், புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது. இதனூடாக, இலங்கையர்களுக்கு தமது பாதுகாப்பான எதிர்காலத்தை அணுக ஏதுவாக அமைந்துள்ளது.” என்றார்.
இந்த இலவச கொவிட்-19 காப்பீடு தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் 24 மணி நேர ஹொட்லைன் இலக்கமான 1330 உடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல் ஊடாக தொடர்பை ஏற்படுத்த info@unionassurance.com எனும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும் அல்லது நிறுவனத்துடன் chat செய்வதற்கு www.unionassurance.com எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.
இலங்கையில் இயங்கும் பழமையான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்கின்றது.
துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2020 ஜுலை மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18 பில்லியனைத் தன்வசம் கொண்டிருந்ததுடன், ஆயுள் நிதியமாக ரூ. 38 பில்லியனைக் கொண்டிருந்தது. 2020 ஆகஸ்ட் மாதத்தில் மூலதன போதுமை விகிதம் (CAR) 434% ஆகவும் காணப்பட்டது.
இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது.
76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago