Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இலங்கையின் மாபெரும் இணையச் சந்தையாகத் திகழ்ந்து வருகின்ற ikman.lk, தளபாடங்கள், இலத்திரனியல் சாதனங்கள், மடிக்கணினி, மொபைல், செல்லப்பிராணிகள், இசைக்கருவிகள் மற்றும் நானாவிதமான பொருட்களின் 50 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இலவச விளம்பரப்படுத்தலை தற்போது வழங்குகிறது.
ஏற்கனவே 3000 இற்கும் மேற்பட்ட வணிக முயற்சிகள் இத்தளத்தில் வணிகங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தளத்தில் முற்றிலும் இலவசமாக இணைந்து கொள்ளவும், கூடுதல் வருமானத்தை ஈட்டவும் முன்வருமாறு ikman.lk புதிய விற்பனையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
“ikman.lk இல் விளம்பரப்படுத்தல் கட்டணத்தை நீக்குவது அனைத்து சிறு அளவிலான வணிகங்களுக்கும் தனியார் விற்பனையாளர்களுக்கும் கொவிட்-19 தொற்றுநோய் நெருக்கடி நிலைமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ஷாபீர் குறிப்பிட்டார்.
அதன்படி, இலத்திரனியல் சாதனங்கள், வீடு மற்றும் தோட்டம், பொழுதுபோக்கு / விளையாட்டு / குழந்தைகள், உணவு மற்றும் விவசாயம், நவநாகரிகம் / ஆரோக்கியம் / அழகு பராமரிப்பு பிரிவுகளுக்கு ஒரு நபருக்கு மாதத்திற்கு நான்கு இலவச விளம்பரப்படுத்தல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, விலங்குகள் மற்றும் அத்தியாவசிய பிரிவுகளுக்கு இரண்டு இலவச விளம்பரப்படுத்தல்களும், மற்றும் கல்விக்கு ஒரு விளம்பரப்படுத்தலும் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த மாற்றத்தின்படி, விற்பனையாளர்கள் இலவச விளம்பரப்படுத்தல் ஒதுக்கீட்டை மீறியவுடன் கூடுதல் விளம்பரப்படுத்தல்களுக்கு மாத்திரமே கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கிடையில், Urgent Bundle திட்டம் என்பது ஒரு புதிய விளம்பர வகையாகும், இது அனைத்து இலவச விளம்பரத்திற்கும் ரூ. 250 மட்டுமே என்ற சலுகை வீதத்தில் வழங்கப்படுகிறது.
இந்த ஊக்குவிப்பு விற்பனையாளர்களை இடுகையுடன் இணைக்கப்பட்ட ‘அவசர’ குறிச்சொல் மூலம் தங்கள் விற்பனையின் அவசரத்தைக் காண்பிக்க உதவுகிறது. இந்த விளம்பர வகையின் பின்னால் உள்ள சிந்தனை, விரைவான விற்பனைக்கு வழிவகுக்கும் வகையில் உடனடி கொள்வனவாளரைக் கண்டறிவதாகும்.
விளம்பர விவரங்கள் பக்கத்தின் மேலே காட்சி நிலையுடன் மூன்று நாள் விளம்பரங்களை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது.
விளம்பரம், இதேபோன்ற விளம்பரங்களில் காண்பிக்கப்படும் மற்றும் விளம்பர செயல்திறன் பக்கத்தில் தொடர்பு கொண்டவர்கள் மற்றும் விளம்பரங்களைப் பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை போன்ற விற்பனையாளர் நுண்ணறிவுப் பகுப்பாய்வுகளையும் வழங்கும்.
மதிப்பு கூட்டாக, Urgent Bundle மூலம் இலவச விளம்பரங்களைப் பயன்படுத்தும் விற்பனையாளர்களுக்கு அவர்களின் iOS பயன்பாடுகளில் பகுப்பாய்வுகளுக்கான அடைவு வசதி வழங்கப்பட்டுள்ளது. இது முன்னர் இணையத்திற்கு மட்டுமே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
37 minute ago
52 minute ago
1 hours ago