Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 மே 17 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT டிஜிட்டல் இன்ஃபோ சேர்விசஸ் (பிரைவட்) லிமிடெட் (SLTDS) தமது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) இணையத்தளத்தை மேம்படுத்தி புதிய தோற்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. பரந்தளவு இணையத்தள வடிவமைப்பு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரப்படுத்தல் சேவைகளை கொண்டுள்ள SLTDS, வாடிக்கையாளர்களின் வியாபார இலக்குகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு அவசியமான இணைய வடிவமைப்புசார் வசதிகளை வழங்குகின்றது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது பல செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம், அதன் இணையத்தளம் மீளவடிமைப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது. புதிய இணையத்தளத்தினூடாக அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச அங்கத்தவர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு பெருமளவு தகவல்களை பெற்றுக் கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல புதிய உள்ளம்சங்களான e-Shop, Payment Gateway Integration, Member Login Area போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனூடாக அங்கத்தவர்களுக்கு தமது அங்கத்துவத்தை இலகுவாக புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும் கார் லேபிள்கள் மற்றும் CPD நிகழ்ச்சிகள், மாநாடுகளுக்கு பதிவு செய்து கொள்ள முடியும். அத்துடன், இதனூடாக 50 க்கும் அதிகமான BASL வெபினார்களுக்கான அணுகல் வசதிகளும் வழங்கப்படுகின்றன. புதிய ஒன்லைன் தொழில் வங்கிப் பகுதியும் (online Job Bank) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பல இலங்கையர்கள் இணையத்தளங்களை மொபைல் சாதனங்களினூடாக பார்வையிடுவது காரணமாக, இந்த இணையத்தளம் மொபைல்-சாதனத்தில் பார்வையிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற தேசிய சட்ட மாநாடு 2021 இன் நிறைவு வைபவத்தின் போது இந்த புதிய இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுன ஒபேசேகர, BASL இன் தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ, PC, BASL இன் செயலாளர் ரஜீவ் அமரசூரிய மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago