Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
J.A. George / 2021 மே 03 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021ஆம் ஆண்டில் உலக சிறுநீரக தினத்தில், உலகத்தரம் வாய்ந்த டயாலிசிஸை வழங்க, உலகின் முதற்தர டயாலிசிஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டது.
வலமிருந்து இடமாக: டொக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா (முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், சுகாதார சேவைகள்), பேராசிரியர் ரெஸ்வி ஷெரிப் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், தலைவர், மேற்கு மருத்துவமனை), டொக்டர் ருஷ்டி நிஜாம் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், களுபோவில போதனா வைத்தியசாலை) மருத்துவ தாதி குமாரி ராஜபக்ஷ (வெஸ்டர்ன் ஹாஸ்பிடலின் டயாலிசிஸ் பிரிவின் பிரதம மருத்துவ தாதி ) ஆகியோர் உலகின் நம்பர் 1 டயாலிசிஸ் நிறுவனமான ஃப்ரெசினியஸ் மெடிக்கல் கேர் மூலம் இயக்கப்படும், நியூ வெஸ்டர்ன் டயாலிசிஸ் பிரிவை நாடாவை வெட்டித் திறந்துவைப்பதைப் படத்தில் காணலாம்.
2021ஆம் ஆண்டின் உலக சிறுநீரக தினத்தை, வெஸ்டர்ன் மருத்துவமனை (டபிள்யூ.எச்), கொவிட்-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியிலும் மிகப் பாதுகாப்பான சூழலில் கொண்டாடியது. வெஸ்டர்ன் மருத்துவமனை ஐஎஸ்ஓ 9001: 2015 கியூஎம்எஸ் சான்றளிக்கப்பட்ட ஒரு மருத்துவமனையாகும்.
இலங்கையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸின் சிகிச்சையின் முன்னோடியாக இம்மருத்துவமனை திகழ்வதுடன், 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, உலக சிறுநீரக தினத்தை (உ.சி.தி) கொண்டாடிய இலங்கையில் முதல் மருத்துவமனை என்ற கிரீடத்தையும் சூடிக்கொண்டுள்ளது.
சிறுநீரக நோயுடன் நன்றாக வாழ்வது என்ற கருப்பொருளின் அடிப்படையில், வெஸ்டர்ன் மருத்துவமனை உ.சி.தி 2021 ஐ இம்முறை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.
டொக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா (முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், சுகாதார சேவைகள்), டொக்டர் ருஷ்டி நிஜாம் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், களுபோவில போதனா வைத்தியசாலை) ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் பேராசிரியர் ரெஸ்வி ஷெரிப் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், தலைவர், மேற்கு மருத்துவமனை) சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வு ஹாய் தொலைக்காட்சியல் ஒளிபரப்பப்பட்டு. சிரஸ எஃப்எம்மில் ஒலிபரப்பியும் இருந்தனர். உலக சிறுநீரக தினத்தின்போது, இரண்டு முக்கியமான டயாலிசிஸ் பிரிவுகள் அமைக்கப்பட்டன. விஜய ரான்சி மெமோரியல் மெர்சி டயாலிசிஸ் சென்டர் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு, அமரர் விஜய ரான்சி நினைவாகத் தொடங்கப்பட்டது.
இந்த மையத்தின் சிறப்பு என்னவென்றால், தனியார் சுகாதாரத் துறையில் இலங்கையில் மிகவும் மலிவு டயாலிசிஸை இலங்கை ரூபாய் 4,950 க்கு ஓரு தரத்துக்கு அறிமுகப்படுத்தியமை ஆகும். இதில் ஜனாதிபதி நிதி நோயாளிகளும் விண்ணப்பிக்கலாம்.
இந்த முயற்சி, இலங்கையின் ஏழை மக்களும் மிகக் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வைப் பெற உதவும். உலக சிறுநீரக தினத்துக்காக அமைக்கப்பட்ட மற்ற டயாலிசிஸ் பிரிவு, டயாலிசிஸ் மற்றும் டயாலிசிஸ் உபகரணங்களுக்கான உலகின் நம்பர் 1 எம்.என்.சி ஆல் இயக்கப்படும் நியூ வெஸ்டர்ன் ஹீமோடையாலிசிஸ் மையம் ஃப்ரெசினியஸ் மருத்துவ பராமரிப்பு திறக்கப்பட்டது.
மருத்துவச் சிகிச்சைக்கான கட்டனம் முன்பு இருந்ததைப் போலவே இருக்கும், ஆனால், டயாலிசிஸ் நோயாளிகளுக்கு இந்த மையம் இப்போது விடுமுறையாகும். இருந்தபோதிலும் சர்வதேச தரத்துக்கு இணையாக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ பலன்களையும் உருவாக்குகிறது. இந்த மையத்தில் புத்தம் புதிய ஃப்ரெசீனியஸ் 4008 கள் டயாலிசிஸ் இயந்திரங்கள், பயோ தர நீர் தயாரிக்கக்கூடிய அக்வா டீ10 சுஃழு இயந்திரங்கள், அல்ட்ரா தூய டயாலிசிஸ் திரவம், அவசரகால நோயாளிகளுக்கு ஐ.சி.யூ பராமரிப்பு, வசதியான டயாலிசிஸ் நாற்காலிகள், மின்சார சாய்ந்த நாற்காலிகள், தொலைக்காட்சிகள் அன்பான பராமரிப்பும் அனுபவமும் வாய்ந்த நெப்ராலஜிஸ்டுகள், டயாலிசிஸ் தாதியர்கள் 35 ஆண்டுகளில் 120,000 க்கும் மேற்பட்ட டயாலிசிஸை மேற்கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்புகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன.
வெஸ்டர்ன் மருத்துவமனை தனது புதிய வலைத்தளத்தை உலக சிறுநீரக தினம் 2021 இல் அறிமுகப்படுத்தியது. இதில் பயனர் நட்பு இடைமுகம் போன்ற சில சிறந்த அம்சங்கள் உள்ளன.
மருந்தகம், ஆய்வகத்துக்கான ஒன்லைன் சாட்போட், ஒன்லைன் ஆய்வக அறிக்கை, தலைமுறை, ஒன்லைன் மருத்துவர் சேனலிங், வெளிநாட்டு பில் கொடுப்பனவுகள், மருத்துவமனை வசதிகளின் 360 டிகிரி மெய்நிகர் பயணங்கள், நோய்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து மக்களுக்குக் கற்பிப்பதற்கான அறிவு மையம் உள்ளிட்ட நோயாளிகளுக்கு பயனுள்ள வலைத்தளங்கள் பல உள்ளன.
வலைத்தளத்தை www.westernhospital.lkஇல் காணலாம். ;. Benworld Wide, Arogya Life Systems, Doc990 and 21cc ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
உ.சி.தி 2021 உடன் கூடுதலாக, வெஸ்டர்ன் மருத்துவமனை 500 ரூபாய்க்கு மிகவும் மலிவு சிறுநீரக பரிசோதனை தொகுப்பை அறிமுகப்படுத்தியது.
இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50மூ தள்ளுபடி பெறுகிறார்கள். மேலும் ம தன்மை விருந்தினர்களுடனான உரைகள் மூலம் நோயாளி கல்வி, சிறுநீரக நோய் குறித்த பொது கல்வி துண்டு பிரசுரம், உணவு, உடற்பயிற்சி குறித்த கல்வி வீடியோக்கள் மற்றும் ஜி.ஆர் 8 செல்பி போட்டி மற்றும் பதில், பகிர்வு மற்றும் வெற்றி போட்டி போன்ற போட்டிகளும் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டன.
எவ்வாறாயினும், வழக்கமான இலவச கிளினிக், கல்வி கருத்தரங்குகள் மற்றும் ஆண்டுக்கான பொது நடைமுறைகள் உ.சி.தி 2021 இன் போது நடைபெறவில்லை, ஆனால் பெருந்தொற்று அடங்கியபின்னர், மீண்டும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்டர்ன் மருத்துவமனை ஊழியர்கள் பலூன்கள், புறாக்களைப் பறக்கவிட்டு, 2021 உலக சிறுநீரக தினத்தை ஆரம்பித்து வைக்கிறார்கள்.
விஜய ரான்சி மெமோரியல் மெர்சி டயாலிசிஸ் நிலையத்தை, நினைவுத் தகட்டின் திரைச்சீலையை கௌரவ விருந்தினர் டொக்டர் ருஷ்டி நிஜாம், பேராசிரியர் ரெஸ்வி ஷெரிப் ஆகியோர் திறந்துவைப்பதையும் அருகில் அவரது குழு பார்த்துக் கொண்டிருப்பதையும் படத்தில் காணலாம்.
ஃப்ரெசீனியஸ் மருத்துவ கெயாரால் இயக்கப்படும் நியூ வெஸ்டர்ன் ஹீமோடையாலிசிஸ் பிரிவை இங்கே காணலாம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago