Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மே 10 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் சேவை காப்புறுதி வழங்குநர் 2021 ஆக யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, இன்டர்நஷனல் ஃபினான்ஸ் விருதுகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. போட்டிகரமான தீர்வுகளினூடாக வாடிக்கையாளர் ஈடுபாடுகளை பாதுகாப்பதற்கு தம்மை அர்ப்பணித்துள்ள மற்றும் வாடிக்கையாளர் தேவைகள் குறித்து கவனம் செலுத்தும் உலகளாவிய ரீதியில் காணப்படும் நிறுவனங்களின் விளக்கமான மதிப்பாய்வுகளை மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து, யூனியன் அஷ்யூரன்சுக்கு இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களை மையப்படுத்திய புத்தாக்கம் என்பது எமக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. ஊழியர்களுக்கு தாம் பாதுகாப்பாக உணரும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், எமது தீர்வுகள், செயன்முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தினூடாக வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த வழிமுறையானது, தொற்றுப் பரவும் காலப்பகுதியில் எமக்கு போட்டிகரமான அனுகூலத்தை வழங்கியிருந்ததுடன், மாற்றமடைந்த சூழலுக்கு எம்மை பழக்கப்படுத்திக் கொள்ளவும், எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்றவும் உதவியிருந்தது.” என்றார்.
தொற்றுப் பரவலின் போது வாடிக்கையாளர்களுக்கு தமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்தவாறே புதிய வியாபார மற்றும் புதுப்பித்தலுக்கான தவணைக் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதற்கான கட்டமைப்பொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக 90 சதவீதமான புதுப்பித்தல்கள் டிஜிட்டல் கொடுப்பனவு கட்டமைப்புகளினூடாகவும் வங்கிக் கணக்குகளுக்கிடையிலான மாற்றங்களினூடாக மேற்கொள்ளப்படுகின்றன. டிஜிட்டல் மயமாக்கத்துக்கு நிறுவனம் தயார்நிலையில் காணப்பட்டமையானது, வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு முகவர் செயலணியினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதற்கு பெருமளவு உதவியாக அமைந்திருந்தது. காப்புறுதிதாரர்களுக்கு தடங்கலில்லாத சேவை 24/7 நேர மும்மொழிகளிலும் இயங்கும் அழைப்பு நிலையம், WhatsApp, ஒன்லைன் chat bot சேவை மற்றும் ClickLife app ஆகியவற்றினூடாக உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், வாடிக்கையாளர்கள் தமது வீடுகளிலிருந்தவாறே விடயங்களை சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டிருந்தது.
சகல வசதிகளையும் கொண்ட முறைப்பாடு நிர்வாகக் கட்டமைப்பொன்றை நிறுவி, வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் துரிதமாக தீர்க்கப்படுவதை நிறுவனம் உறுதி செய்திருந்தது. காப்புறுதிதாரர்களுக்கு ஒரு நாளில் சேவைகளை வழங்குவதில் 85% வெற்றிகரமான நிலையை பேணியிருந்தது.
கோம்ஸ் மேலும் குறிப்பிடுகையில், “எமது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள், வாழ்க்கைமுறைகள் மற்றும் உறவுகளை பாதுகாப்பது தொடர்பில் எழுந்த சவால்கள் அனைத்தையும் வாய்ப்பாக பயன்படுத்தி, எமது வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்தவாறு அவசியமான உதவிகளை வழங்கியிருந்தோம், அதனூடாக பொறுப்பு வாய்ந்த காப்புறுதிதாரர் என்பதை மேலும் உறுதி செய்திருந்தோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago