Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 09 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் புகழ்பெற்ற இளம் ஃபோர்மியுலா 3 பந்தய வீரரான யெவான் டேவிட், இலங்கையை ஃபோர்மியுலா 3 பந்தயத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலைக்கு உயர்ந்தும் நிலையை நோக்கி தாம் முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில், இதுவரையில் யெவானின் வெற்றிகளில் பங்களிப்பு வழங்கியிருந்த பலம் வாய்ந்த அணியினரை வெளி உலகுக்கு அறிமுகம் செய்திருந்தார். அத்துடன் யெவான் இதுவரையில் கடந்து வந்த வெற்றிப் பயணம் தொடர்பிலான விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், இலங்கை சார்பாக அவர் எய்தியுள்ள சாதனைகளை கொண்டாடியிருந்தார்.
சர்வதேச புகழ்பெற்ற பந்தய வர்ணனையாளரான ஜேக் சான்சனின் ஆரம்ப உரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. இவர் யெவானின் பந்தய பயணம் தொடர்பான ஆழமான விளக்கங்களை வழங்கியிருந்தார். “இலங்கையை ஃபோர்மியுலா 1 உலகுக்கு கொண்டு செல்லும் நபர்” என யெவானை இவர் அறிமுகம் செய்திருந்தார்.
சகல ஃபோர்மியுலா 3 பிரிவிலும் பல தடவைகள் வெற்றியீட்டியுள்ள இலங்கையின் முதலாவது ஃபோர்மியுலா பந்தய வீரரான யெவான், தனது நோக்கம், இலட்சியம் மற்றும் வாழ்க்கையை மாற்றுவதில் ரேசிங்கின் வலிமை தொடர்பான விடயங்களை நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அண்மையில் மொன்ஸாவில் பெற்றுக் கொண்ட வெற்றி தொடர்பில் யெவான் குறிப்பிடுகையில், “இலங்கையில் உள்ளமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், அனைவரிடமிருந்தும் கிடைக்கும் சிறந்த ஆதரவு தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்த கிடைத்த வாய்ப்பு மிகவும் பெருமைக்குரியதாக அமைந்திருப்பதுடன், விளையாட்டின் உச்ச நிலைக்கு எமது கொடியை கொண்டு செல்வதற்கு நான் முயற்சிக்கின்றேன்.” என்றார்.
யெவானின் அறிமுக ஆண்டில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகள் தொடர்பில் அவரின் முகாமையாளர் ஹொரியா டொட்டு குறிப்பிடுகையில், “இந்த ஆண்டு நாம் அவதானித்த பெருமளவு முன்னேற்றம் மற்றும் திறமையின் அடிப்படையில், யெவானுக்கு ஆகாயமே எல்லையாக அமைந்திருக்கும்.” என்றார்.
யெவானின் உடற்தகைமை பயிற்றுவிப்பாளர் அலெக்ஸ் ஸ்டொட் மோட்டார் விளையாட்டில் முன்னேறுவதற்கு உடல் மற்றும் உளசார் நிலையின் முக்கியத்துவம் மற்றும் அவற்றில் யெவானை தயார்ப்படுத்துவது தொடர்பில் குறிப்பிடுகையில், “யெவானின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் செயற்பாடுகள் போன்றன தலைமுறையில் ஒரு தடவை மாத்திரமே வெளிப்படுத்தப்படுவதாக அமைந்துள்ளது. யெவானிடம் நான் தொடர்ச்சியாக அவதானிப்பது, ஃபோர்மியுலா 1 வரை முன்னேறிய, நான் முன்னர் பணியாற்றிய பந்தய வீரர்களை விட இவரின் நடவடிக்கைகள் சிறப்பானவையாகவும், அவர்களை விட விஞ்சியவையாகவும் அமைந்துள்ளன.” என்றார்.
யெவானின் சர்வதேச ஊடக உறவுகள் மற்றும் தொடர்பாடல் முகாமையாளர் அண்டி ஸ்டோபார்ட் குறிப்பிடுகையில், “ஒன்லைனில் யெவானின் வேகமாக அதிகரித்து வரும் பிரசன்னம், வெளிப்படுத்தல்கள், பெறுபேறுகள் மற்றும் சர்வதேச ஊடக நாட்டம் போன்றன இவரை இலங்கையின் தூதுவராக சர்வதேச அரங்கில் திகழச் செய்துள்ளதுடன், அவரின் திறமைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளன.” என்றார்.
யெவானின் சாதனைகளை கொண்டாடியிருந்தமை மட்டுமன்றி, வரலாற்று சாதனை படைக்கும் அவரின் ஆற்றலை வெளிக் கொண்டு வருவதாகவும், ஃபோர்மியுலா 1 நோக்கிய அவரின் பயணத்துக்கு கூட்டாண்மை அனுசரணையைப் பெற்றுக் கொள்வதற்கு அழைப்புவிடுப்பதாகவும் அமைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago