Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனமான விஜய நியுஸ்பேப்பர்ஸ், Rakuten Viber உடன் கைகோர்த்து இலங்கையில் முதன் முறையாக இராசி பலன்களை பார்வையிடக்கூடிய Chatbotஐ அறிமுகம் செய்துள்ளது.
இந்த bot இனூடாக வாரத்திற்கான இராசி பலன்களை பார்வையாளர்கள் சுலபமாக அறிந்து கொண்டு, தமது சுபகாரியங்களை முற்கூட்டியே முறையாக திட்டமிட்டுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
நாட்டிலுள்ள முன்னணி இராசிபலன் கணிப்போர், தமது சேவைகளை நாடுவோரை சென்றடைவதற்காக முன்னணி பத்திரிகைகளான லங்காதீப, டெய்லி மிரர் மற்றும் தமிழ் மிரா் ஆகியவற்றில் பெருமளவில் தங்கியிருந்ததுடன், வாசகர்களும் தமது சுப காரியங்களை முன்னெடுப்பதற்கும், தமது நாளாந்த மற்றும் வாரந்த கிரக நிலைகள் மற்றும் இராசி பலன்களை அறிந்து கொள்ள இந்தப் பத்திரிகைகளில் பிரசுரமாகும் பலன்களை பார்வையிட்டு வருகின்றனர்.
தற்போது Viber இனால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த chatbot சேவையானது முற்றிலும் இலவசமாக அமைந்துள்ளது. தமிழ், சிங்களம் அல்லது ஆங்கில மொழிகளில் இந்த இராசிபலன்களை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
இலங்கையர்களின் வாழ்க்கையில் ஜோதிடம் என்பது முக்கிய அங்கம் வகிக்கின்றது. பிறப்பு முதல் ஜோதிட கணிப்பை பின்பற்றி, வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் அனைத்திலும் ஒரு நம்பிக்கையான ஜோதிடரை அணுகி, கால நேரத்தை கணித்து அதற்கேற்ற வகையில் அவற்றை மேற்கொள்வார்கள்.
Viber இன் இந்த ஜோதிட bot ஊடாக, பாவனையாளருக்கு பயன்படுத்த எளிமையான அனுபவம் வழங்கப்படுவதுடன், தினசரி மற்றும் வாராந்தம் சுருக்கமாக 12 இராசிகளுக்குமான பலன்களை பெற்றுக் கொள்ளும் அனுபவத்தை வழங்குகின்றது. உங்களின் நாள் எப்படி அமைந்திருக்கும், வீட்டில் மற்றும் பணியிடத்தில் உங்கள் உறவு எப்படி அமைந்திருக்கும் போன்ற தகவல்கள் வழங்கப்படும்.
Viber’s custom sticker pack ஐ டவுன்லோட் செய்யும் போது சுயமாக இந்த ஜோதிட chatbot க்கு உங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
இந்த பிரத்தியேகமான உள்ளம்சம் தொடர்பாக Rakuten Viber இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஒஃபிர் இயால் கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையில் அதிகரித்துச் செல்லும் பாவனையாளர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது எமது நோக்காக அமைந்துள்ளது. இதற்காக இவ்வாறான புதிய உள்ளம்சங்களை நாம் அறிமுகம் செய்கின்றோம். எனவே, ஜோதிட chatbot ஐ எம்மால் வழங்கி, அதனூடாக பாவனையாளர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் களிப்பையும் ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம்.' என்றார்.
இலங்கைச் சந்தைக்கு Viber இன் மற்றுமொரு புத்தாக்கமான உள்ளம்சமாக இந்த chatbot அமைந்துள்ளது பாவனையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்குவதுடன், 132,000 பாவனையாளர்களை கொண்டுள்ளது.
தினசரி வாழ்க்கையில் இராசி பலன்கள் எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதில் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ள இலங்கையர்களை இலக்காகக் கொண்டு இந்த உள்ளம்சம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago