Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச மற்றும் தனியார் துறையின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மற்றுமொரு அங்கமாக, வட மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று, வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான உதவிகள் திட்டத்தினூடாக வட மாகாண சுகாதாரத் துறையின் முன்னிலை சுகாதார அதிகாரிகளுக்கு அவசியமான திறன் கட்டியெழுப்பல் பயிற்சிகளை வழங்க ஆசிரி குரூப் ஒஃவ் ஹொஸ்பிட்டல்ஸ் முன்வந்திருந்தது.
மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த பயிற்சித் திட்டத்தில் வட பிராந்தியத்தின் அரச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 112 பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த சிகிச்சையளிப்பு மற்றும் சிகிச்சைசாரா ஊழியர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சிகளைப் பெற்றிருந்தனர். இந்த பங்குபற்றுநர்களில் பணிப்பாளர்கள், மருத்துவ அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள், விடுதித்தலைவிகள், சிகிச்சைப் பிரிவு தாதியர்கள் மற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் என பலரும் அடங்கியிருந்தனர்.
நோயாளர் பாதுகாப்பு முகாமைத்துவம், சுகாதார பராமரிப்பு சேவையில் தரம், தகவல் நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் தொடர்பாடல்கள், தொற்றுக் கட்டுப்படுத்தல், கழிவு முகாமைத்துவம், மனித வளங்கள் முகாமைத்துவம், செலவுக் கட்டுப்படுத்தல்கள் மற்றும் சரக்கு இருப்புக் கையாளல்கள் போன்ற தலைப்புகளில் இந்தப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த பயிற்சித்திட்டத்தின் போது, பங்குபற்றுநர்களுக்கு JCI சான்றிதழ் பெற்ற ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் சிகிச்சை பகுதிகள், Neuro Intensive Care Unit, Neuro Catheterization Laboratory, Dialysis Centre, Cardiac, Emergency Treatment Units, the Bio Medical Department, Medical Records Department, fuel storage, generators, housekeeping areas போன்றவற்றுக்கு விஜயம் செய்து நேரடி அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டிருந்தது.
பயிற்சித் திட்டத்தின் நிறைவில், சகல பங்குபற்றுநர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், தாம் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பில் அவர்கள் வரவேற்பு மிக்க கருத்துப் பகிர்வையும் வழங்கியிருந்தனர்.
இந்த பயிற்சித் திட்டம் தொடர்பாக, ஆசிரி குரூப் ஒஃவ் ஹொஸ்பிட்டல்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர். மஞ்சுள கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில், 'பொது சுகாதாரத் துறையுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவதில் ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் சிறந்த பதிவுகளைக் கொண்டுள்ளது. வட மாகாணத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கு தமது திறன்களை விருத்தி செய்து கொள்வதில் எம்மால் பங்களிப்பு வழங்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். தேசம் தற்போதைய சுகாதார சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இந்தத் திட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது.' என்றார்.
ஆசிரி குரூப் ஒஃவ் ஹொஸ்பிட்டல்ஸ் குழுமத்தில், ஆசிரி சென்ரல் வைத்தியசாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக அமைந்துள்ளது. முன்னோடியான மருத்துவ சேவைகளை வழங்குவதில் புகழ்பெற்றுள்ளது. ஆசிரி சென்ரல் வைத்தியசாலை ஊடாக, நோயாளர்களுக்கு நவீன இனங்காணல் சேவைகள் வழங்கப்படுவதுடன், தற்போதைய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு பொருத்தமான வகையில் இவை அமைந்துள்ளன. JCI சான்றிதழைப் பெற்ற வைத்தியசாலை எனும் வகையில், ஆசிரி சென்ரல் எப்போதும், நோயாளர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago