Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 18 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தொடர்ந்து நான்காவது ஆண்டாக வர்த்தகம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்காக இலங்கையின் கொமர்ஷல் வங்கியை அதன் 'முன்னணி பங்குதாரர் வங்கியாக' கௌரவித்துள்ளது.
சிங்கப்பூரின் மாண்டரின் ஓரியண்டலில் நடைபெற்ற ADB யின் 10வது வர்த்தக மற்றும் விநியோகச் சங்கிலி நிதித் திட்ட (TSCFP) நிகழ்வில் தேசியப் பொருளாதாரத்திற்கு கொமர்ஷல் வங்கி வழங்கி வரும் வர்த்தகம் மற்றும் நிதிப் பங்களிப்புகளுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2023 ஜூலை 1 மற்றும் 2024 ஜூன் 30 க்கு இடையில் இலங்கையின் வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலி நிதிதளத்தில் அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளை ADB உதவியுடன் கொமர்ஷல் வங்கி மேற்கொண்ட சாதனையானது அங்கீகரிக்கப்பட்டது. ADB TSCFP விருதுகள் விழாவில் கொமர்ஷல் வங்கி 36 கௌரவமிக்க விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்ட 31 வங்கிகளில் ஒன்றாகும்.
ADB ஆனது எங்களின் மிகவும் கௌரவமிக்க பங்காளர்களில் ஒன்றாகும், மேலும் கொமர்ஷல் வங்கியை இலங்கையின் மிகப்பாரிய வர்த்தக வசதியாளர்களில் ஒன்றாக மாற்றுவதற்கு ADB வழங்கிய பங்களிப்பை நாங்கள் பெரிதும் பாராட்டுகின்றோம்' என வங்கியின் உதவி பொது முகாமையாளர் - பெருநிறுவன வங்கி பி. ஏ. எச். எஸ். ப்ரீனா தெரிவித்தார். 'கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இருவரையும் வர்த்தகம் தொடர்பான அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நுட்பங்கள் மற்றும் கருவிகளை ADB எங்களுக்கு வழங்குகிறது, இதன் மூலம் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை செய்யும் வர்த்தகங்களை ஆதரிக்கிறது. இந்த விருது இந்த துறையில் எங்கள் உறவின் வெற்றியை வெளிப்படுத்துகிறது.
கொமர்ஷல் வங்கி இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி மற்றும் உலகின் சிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும். கொமர்ஷல் வங்கி திறன்மிகு முறையில் அமையப்பெற்ற கிளை வலையமைப்புக்கள் மற்றும் 974 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது, அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago