Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அதிகளவு நேசிக்கப்படும் சிறந்த 10 நிறுவனங்கள் வரிசையில் CBL குழுமம் தொடர்ச்சியாக 3ஆவது வருடமாகவும் உள்வாங்கப்பட்டிருந்தது. பட்டைய முகாமைத்துவ கணக்காளர்கள் கல்வியகம் (CIMA) மற்றும் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) ஆகியன இணைந்து இந்த தரப்படுத்தலை மேற்கொண்டிருந்தன. பொதுப் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் உறுதியான செயற்பாடுகள் மற்றும் நிதிசார் நடவடிக்கைகள் போன்றவற்றுக்காகவும், நுகர்வோர்கள், பங்காளர்கள், ஊழியர்கள் என பரந்த தரப்பினருக்கு பெறுமதி சேர்ப்பதற்காக கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நெருக்கடியான சூழலில் நிறுவனங்கள் எவ்வாறு தம் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன மற்றும் மீட்சியை பதிவு செய்திருந்தன என்பது தொடர்பில் இந்த ஆண்டில் விருதுகள் வழங்கும் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது. சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடுவர்கள் மதிப்பாய்வுகளை மேற்கொண்டிருந்தனர். நிதிப் பெறுபேறுகள் மாத்திரமன்றி, நுகர்வோர், பங்காளர்கள், ஊழியர்கள் மற்றும் பரந்தளவு சமூகத்துக்கு பெறுமதி உருவாக்கத்தில் ஆற்றியிருந்த பங்களிப்பு பற்றியும் கவனம் செலுத்தியிருந்தனர்.
குழும முகாமைத்துவ பணிப்பாளர் ஷியா விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “CBL தயாரிப்புகள் நாடு முழுவதையும் சேர்ந்த நுகர்வோர் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தொற்றுப் பரவல் காலப்பகுதியில் எமது உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதையும், நுகர்வோரை அவை சென்றடைவதையும் உறுதி செய்யும் பணிகளை நாம் மேற்கொண்டிருந்தோம். CBL பெறுமதி சங்கிலியைச் சேர்ந்த ஒவ்வொரு பங்காளர்களினாலும் எமது வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கப்படுவதுடன், தொற்றுப் பரவல் காலப்பகுதியில், பங்காளர்களுக்கு உறுதியான வாழ்வாதாரம் காணப்படுவது மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்கு பாரிய பங்களிப்பை வழங்க வேண்டிய தேவையை CBL கொண்டிருந்தது என்பதை நாம் அறிந்திருந்தோம். எமது தயாரிப்புகள் ஒவ்வொரு இலங்கையரின் இல்லத்தையும் சென்றடைவதுடன், உலகளாவிய ரீதியில் 60க்கும் அதிகமான நாடுகளுக்கும் செல்கின்றன.நெருக்கடியான சூழலிலும், எமது சகல வாடிக்கையாளர்களுக்குமான பொறுப்புகளை நாம் தொடர்ச்சியாக நிறைவேற்றுவதை CBL அணியினர் உறுதி செய்தனர்.” என்றார்.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில், தொற்றுப் பரவலுடனான சூழலிலும், குழுமம் சிறப்பாக செயலாற்றியிருந்ததுடன், அதில் 6000 க்கும் அதிகமான பணியாளர்களின் அர்ப்பணிப்பான நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றியிருந்ததாக ஷியா குறிப்பிட்டார். புதிய வழமையை பின்பற்றி சகல செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு அனைவரையும் வழிநடத்துவது என்பது குழுமத்தின் சகல துணை நிறுவனங்களினாலும் பிரதானமாக கவனம் செலுத்தப்படும் அம்சமாக அமைந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ஊழியர்களுக்கு முக்கியத்துவமளித்து செயலாற்றுவது என்பது CBL’இன் பணியிட கலாசாரத்தை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது. CBL தனது செயன்முறைகளை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தும் அதேவேளை, இந்த பெருவாரியான சவால்களுக்கு ஊழியர்கள் முகங்கொடுப்பதற்கு எவ்வாறு அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுவது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. 2020/21 பருவ காலப்பகுதியில் விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக தனது பெறுமதி சங்கிலியைச் சேர்ந்த பங்காளர்களுக்கு ரூ. 5 பில்லியனுக்கு அதிகமான தொகையை செலுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago