2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Editorial   / 2017 ஜூன் 21 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபரொருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, புத்தளம் மாவட்ட மேல்நீதிமன்றம், இன்று (21) தீர்ப்பளித்தது.

நீதவான் அன்டன் கீடச் டெப்த், இன்று இத்தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதியன்று, கற்பிட்டி பிரதேசத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து, 1 கிராமும் 180மில்லிகிராமும் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான வழக்கு, தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையிலேயே, நேற்றைய தினம், ​புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி அன்டனி கீடஸ் டெப்த்தினால், மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .