2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விபத்தில் சாரதி படுகாயம்

Niroshini   / 2017 மார்ச் 31 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

இலங்கை அஞ்சல் திணைக்களத்துக்குச் சொந்தமான அஞ்சல் வான் ஒன்று  குடை சாய்ந்து விபத்திக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில், முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களஎலிய பிரதேசத்திலேயே இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான அஞ்சல் அலுவலகங்களுக்கு தபால்களை கொண்டு வந்த வானே  இன்று காலை 7.50 மணியளவில், மங்களஎலி - அம்பலவெளிப் பகுதியில் வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .