Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம், நூர் நகர் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் சேதமடைந்து காணப்படும் கெனல் வீதியினை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து நூர் ஜும்ஆ பள்ளி சந்தியில் நேற்று(10) நடைபெற்றது.
குறித்த பாதையில் பாரிய நீர் விநியோகக் குழாய்கள் பொருத்தப்பட்ட பின்பு இந்த பாதை கைவிடப்பட்டுள்ளதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
நூர் ஜும்ஆ பள்ளி சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட ஊர்வலம், கெனல் வீதி ஊடாக வான் வீதி சந்தியில் நிறைவடைந்து அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் கோஷங்களும் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது பதாதைகளையும் ஏந்தி நின்றனர்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கையொப்பம் திரட்டும் மகஜரிலும் பொதுமக்கள் கையொப்பமிட்டனர்.
இதேவேளை, குறித்த இந்த வீதியினைத் தனது வேண்டுகோளின் பேரில் புனரமைப்புச் செய்வதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 03 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக, நாடாளுன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்துள்ளமைஇங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
2 hours ago