2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வீட்டின் மீது தாக்குதல்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தாந்தீவு ரஹ்மத்புரம் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்று, இன்று (30) அதிகாலை இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் தாக்கிச் சேதப்படுத்தியமை தொடர்பில் வீட்டின் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த முந்தல் பொலிஸார், இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .