2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வேட்டைக்குச் சென்றவர் துப்பாக்கிச்சூட்டில் பலி

Editorial   / 2017 ஜூன் 20 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது சகாக்களுடன் வேட்டைக்குச் சென்ற நபரொருவர், துப்பாக்கியொன்று தற்செயலாகச் செயற்பட்டமையினால் உயிரிழந்த சம்பவம், அநுராதபுரம், கெக்கிராவப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மருதன்கடவல, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சுதர்சன பண்டார என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளாரென, கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், தனது சகாக்கள் மூவருடன் நேற்றிரவு, வேட்டையாடச் சென்றதாகவும் அப்போது சகா ஒருவரின் துப்பாக்கி, தவறுதலாகச் செயற்பட்டமையினால், இவர் படுகாயமடைந்துள்ளாரொனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்தவரை, மருதன்கடவல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதே, சிகிச்சை பலனின்றி இன்று (20) அதிகாலை 4.10க்கு அவர் உயிரிழந்துள்ளாரென, கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .