2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வவுச்சர்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

வென்னப்புவ தொகுதியில், யுத்தத்தால் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு, வவுச்சர் வழங்கும் நிகழ்வு, ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில், வென்னப்புவ வைக்கால்- சஹனகம விளையாட்டரங்கில், நேற்று (10) நடைபெற்றது.

வென்னபுவ பிரதேச சபைத் தலைவர் எ​லெக்ஸ் நிஷாந்த ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், 50 குடும்பங்களுக்கு வுவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.

வீட்டுக்குத் தேவையான  பொருள்களைக் கொள்வனவு செய்யும் வகையில்,  குறித்த வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், கடற்றொழில் இராஜாங்க சனத் நிஷாந்த பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்த, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்தியா குமார ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X