Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 14 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
முந்தல்- மதுரங்குளி நகரில், இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், ரயில்வே திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரங்குளி கீர்த்திசிங்க கம பகுதியைச் சேர்ந்த, 59 வயதுடைய நபரே, விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நாத்தாண்டிய பகுதியிலிருந்து, புத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றும், மதுரங்குளியிலிருந்து முந்தல் பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டதில், இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே, விபத்தில் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய கார் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .