2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மின்சார வேலிகளால் பயனில்லை

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் வனாத்தவில்லு பிரதேச சபைக்குட்பட்ட  எலுவங்குளம் ரால்மடு பகுதியில்,  யானைகளுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மின் வேலியை உரிய முறையில் அமைத்துத்  தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரால்மடு பகுதியில்,  22,764 ஹெக்டேயர் நிலப்பரப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள வனப் பாதுகாப்பு திணைக்களத்தால்,  'வீரகொடிச்சோலை ஒதுக்கப்பட்ட வனம்' என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு  யானைகள் உள்ளே செல்ல முடியாத வகையில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 எனினும், யானைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் குறித்த  மின்சார வேலி உரிய முறையில் அமைக்கப்படவில்லை என,  மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


அத்துடன், குறித்த மின் வேலியை யானைகள் சேதப்படுத்துவதுடன்,  இரவு நேரங்களில் யானைகள்  வெளியே நடமாடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், ரால்மடுவ பகுதியில் 140 ஏக்கருக்கும் அதிகளவில் விவசாய நிலங்கள் காணப்படுவதாகவும்  வெளியே வரும் யானைகள், விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மழையை நம்பி நெல் விதைக்கும் தாங்கள், யானைகளின் அட்டகாசத்தால் தமது வயல் நிலங்களுக்கு காவலாளிகளை ௯லிக்கு அமர்த்தி  வருவதாக குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், சூரிய சக்தி மூலமே,  குறித்த மின் வேலிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதால்,  மின் வேலிக் கம்பிகளில் அடிக்கடி மின்சாரம் இருப்பதில்லை எனவும் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அத்தோடு, குறித்த பாதுகாப்பு மின் வேலியானது ரால்மடு குளத்தின் அணைக்கட்டு பகுதியோடு இணைந்தாற்போல் அமைக்கப்பட்டிருப்பதுடன், எவ்விதமான ஆலோசனைகளும் பெறாமல் இதனை அமைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் மனதை திருப்திப்படுத்துவதற்காக குறித்த மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை எனவும் ௯றுகின்றனர்.

எனவே, இந்த பகுதியில் வாழும் மக்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X