2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மாவத்தகம பங்களாவில் ​வெடிபொருட்கள், தோட்டாக்கள், கைக்குண்டுகள் மீட்பு

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொபட் ஹில் தோட்டத்திலுள்ள பங்களாவொன்றின் உட்கூரைக்குள் இருந்து, ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் உள்ளிட்ட கைக்குண்டுகள் போன்றவற்றை, பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

தோட்ட உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, 3 கைக்குண்டுகள், 67 ரீ56 ரக தோட்டாக்கள், 4 மெகசீன்கள், மற்றைய துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 133 தோட்டாக்கள், பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் 156 தோட்டாக்கள் மற்றும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் மற்றைய சில உபகரணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

தான், வெளிநாட்டிலேயே இருந்து வந்ததாகவும் விடுமுறை நாட்களில் மாத்திரம், தோட்ட பங்களாவில் வந்து இருப்பதாகவும், தோட்ட உரிமையாளர் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய பங்களா, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக, வேறு சிலரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில், வர்த்தகர் ஒருவரும் அவருடைய மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள், இந்த ஆயுதங்களை, பங்களாவில் ஒழித்து வைத்திருக்கலாம் என்று, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .