2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மான் இறைச்சியுடன் ஒருவர் கைது; மூவர் தப்பியோட்டம்

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 06 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு உட்குட்பட்ட மொல்லிக்குளம் பிரதேசத்தில், ஒரு கிலோகிராம் உலர் மானிறைச்சியுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று, நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, துப்பாக்கி ரவைகள் 06, அலைபேசிகள் 03 உள்ளிட்ட உபகரணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டதாக, வில்பத்து தேசிய சரணாலய அலுவலக அதிகாரிகள் தெரவித்தனர்.

குறித்த அலுவலகத்துக்குரிய மொல்லிக்குளம் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு, இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே, இச்சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த முற்றுகை இடம்பெற்ற போது, அங்கிருந்து மேலும் 3 சந்தேகநபர்கள் தப்பியோடியதாகவும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .