2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

மானை வேட்டையாடிய மூவர் கைது

Janu   / 2023 செப்டெம்பர் 06 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனமடுவ , பெட்டிகம பௌத்த விகாரைக்குட்பட்ட பகுதியில் மான்களை வேட்டையாடும் சந்தேக நபர்கள் மூவரை திங்கட்கிழமை (04) கைது செய்த்தாகவும் ஒருவர் மான்களை வேட்டையாடும் துப்பாக்கியுடன் அவ்விடத்தில் இருந்து தப்போயோடியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களர் சிலர், சந்தேகத்திற்கு இடமான வகையில் வாகனமொன்று அப்பகுதியுள்ள விகாரை ஒன்றுக்குள் சென்று கொண்டிருந்ததை அவதானித்து பின் அங்கு சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த , மான்களை வேன்டையாடுவதற்காகவே பிரத்தியேகமாக மாற்றியமைக்கப்பட்ட கெப்வண்டியும் , வேட்டையாடிய மான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்கள் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட மஹகும்புக்கடவல, ரத்மல்கஹவெவ மற்றும் தொடுவாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் மஹவெவ , தொடுவாய் மற்றும் வென்னப்புவ போன்ற பகுதிகளில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இவ்வாறு மான்கள் வேட்டையாடப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சுற்றிவளைப்பின் போது வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியுடன் தப்பியோடிய சந்தேக  நபரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .