Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூலை 28 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
பள்ளம யோதயாகெலே பிரதேசத்தில், கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மனைவி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த பள்ளம பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய கணவரைத் தேடிவருவதாகவும் கூறினர்.
நேற்று இரவு 7 மணியளவில், குறித்த கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவன், கத்தியினால் மனைவியை குத்திக் காயப்படுத்தியுள்ளார்.
கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி கடும் காயத்துக்குள்ளான மனைவி உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகவும், கணவனைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ. அசித லக்ருவான் குறிப்பிட்டார்.
சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .