2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மங்கலஹெலிய பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

முந்தல்-மங்கலஹெலிய பகுதியில், நடப்பு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆட்சியின்போது முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு வேலைத்திட்டத்தில், மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணியில், நடப்பு அரசாங்கம் புதிதாக வீடமைப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வரும் நிலையில், ஏற்கெனவே பெயரிடப்பட்டவர்களை இத்திட்டத்தில் உள்வாக்காததால், இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

மங்கலஹெலிய மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களே, இவ்வர்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மக்களுக்கு, மங்கலஹெலிய-சேதவத்தை பிரதேசத்தில், அரச காணி ஒன்றில் வீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X