2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பொலன்னறுவையிலிருந்து 30,000 மெட்றிக் தொன் நெல் விநியோகம்

Princiya Dixci   / 2017 மார்ச் 07 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

பொலன்னறுவை நெற்களஞ்சியங்களிலுள்ள நெல்லில் 30,000 மெட்றிக் தொன் நெல்லைச் சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக நெற் சந்தைப்படுத்தும் சபையின் வசமுள்ள அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நெற் களஞ்சியங்கள் உள்ளன.

இவற்றிலுள்ள நெல் அரிசியாக மாற்றுவதற்காக 197ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 31,500 மெட்ரிக் தொன் நெல் ஆலை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலன்னறுவை மாவட்டத்துக்கான முகாமையாளர் நிமல் ஏக்கநாயக்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .