2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புத்தளம் நகரில் பெற்றோலுக்குப் பெரும் தட்டுப்பாடு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை பெற்றோலுக்குப் பெரும் தட்டுப்பாடு காணப்பட்டது.

பெற்றோலிய தொழில் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கள் காரணமாகவே, புத்தளத்தில் இவ்வாறு தட்டுப்பாடு காணப்பட்டதாக, பெற்றோல் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பெற்றோலிய தொழில் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு அரசுடனான பேச்சுவார்த்தையை அடுத்து தமது பகிஷ்கரிப்பைத் திங்கட்கிழமை கைவிட்ட நிலையில், புத்தளத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ' பெற்றோல் இல்லை' என்ற வாசகம் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன், புத்தளம் தில்லையடி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் ஒக்சன் 95 (சுபர் பெற்றோல்) மாத்திரம் விநியோகிக்கப்பட்டது. இதனால் மக்கள், மிக நீண்ட நேரம் வரிசையில் தரித்து நின்று தமது வாகனத்தக்கு எரிபொருள் நிரப்பினர்.

அத்தோடு, அங்கு பாரிய வாகன நெரிசல் காணப்பட்டதுடன், காலையில் அலுவலகங்குக்குச் செல்லும் உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், அன்றாட அலுவல்களுக்குச் செல்லும் பொதுமக்கள், வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .