Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 29 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸின் பல போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள புத்தளம் கொரோனா சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தற்போது 33 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளனரென, நகர பிதா தெரிவித்துள்ளார்.
சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய மக்களின் வருகையில் தொடர்ந்து வீழ்ச்சி காணப்படும் பட்சத்தில் கொரோனா சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மத்திய நிலையத்தை மட்டக்களப்பிற்கோ அல்லது வேறு மாவட்டத்திற்கோ மாறறும் நிலைமை ஏற்படலாம் எனவும் நகர பிதா எச்சரித்துள்ளனர்.
எனவே, மக்கள் அனைவரும் இவ்விடயத்தில் ஒன்றுபட்டுஇந்த பேராபத்தை தடுக்க முன்வருமாறும் அவர் வேண்டிக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று கண்காணிப்புக்கான சந்தேகப் பட்டியலில் உள்ள அனைவரும் காலம் தாழ்த்தாது புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு வந்து சிகிச்சை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தம்மையும், ஏனைய சகோதர மக்களையும் இந்த பேரழிவிலிருந்து காக்க உடனடியாக வருமாறு அழைப்பு விடுத்துள்ளார.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .