2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் 129,276 பேர் பாதிப்பு

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 07 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக ஒரு இலட்சத்து 29 ஆயிரத்தி 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 161 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 36,394 குடும்பங்களைச் சேர்நத ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் புத்தளம், முந்தல், கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, ஆனமடு, கருவலகஸ்வெவ, நவகத்தேகம, மகாகும்புகடவல, சிலாபம், மஹாவ, தங்கொட்டுவ ,பள்ளம மற்றும் ஆராச்சிக்கட்டு ஆகிய பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 8,838 குடுமபங்களைச் சேர்ந்த 32,441 பேருக்கு அந்ததந்த பிரதேச செயலகங்களின் ஊடாக பௌசர்கள் மூலம் குடி நீர் வநியோகிப்பட்டு வருவதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடும் வரட்சி காரணமாக மாவட்டத்திலுள்ள பல குளங்கள் மற்றும் குட்டைகள் நீர்வற்றிய நிலையில் இருப்பதால், கால்நடைகள், நீரைப் பருவதில் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதுடன் கால் நடைக்கான மேச்சல் நிலங்களும் கருகிய நிலையில் காணப்படுகின்றது. விவசாய நிலங்களும் செங்கல் உற்பத்தியும் நீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .