2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பண மோசடி: யுவதிக்கு 18 வருடங்கள் சிறை

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2001ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வரையில், வங்கி ஒன்றில் பணியாற்றி, பண மோசடி செய்த யுவதியோருவருக்கு, பொலனறுவை நீதிமன்றம், 18 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ - மாணவியருக்கு, மக்கள் வங்கியில் தற்காலிக அடிப்படையில், பணி வழங்கப்படுகின்றது.

இவ்வாறு பணிக்குச் சென்ற யுவதியொருவர், சுமார் 30 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த யுவதிக்கு பொலனறுவை நீதிமன்றம்  நீதிபதி நிமால் ரணவீர, 18 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்ததுடன், 90 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

பொலனறுவை, பெந்திவல, ஜயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த யுவதிக்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு உதவிய அவரது சகோதரருக்கும், 18 ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .