2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நிதி மோசடி விவகாரம்: பெண்ணுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதாகக் கூறி, பெற்றோர்களிடம் நிதிமோசடி செய்த பெண்ணொருவரை, நாளை 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார். 

இந்தச் சம்பம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதாகக் கூறி, பெண்ணொருவர் நிதிமோசடி செய்ததாகக் கூறி, பெற்றோர்கள் ஐவர், நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த நீர்கொழும்பு பொலிஸார், குறித்த பெற்றோர்களிடம் நிதிமோசடி செய்ததாகக் கூறப்படும் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரைக் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தகிதி கைதுசெய்தனர்.  

கைது செய்யப்பட்ட குறித்த பெண், 12 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .